ADVERTISEMENT

எச்சரிக்கை!! Lulu குழுமம் €250 இலவச ஷாப்பிங் கூப்பன்களை வழங்குவதாக சமூக ஊடகங்களில் உலா வரும் போலி செய்தி..!!

Published: 12 Nov 2020, 11:45 AM |
Updated: 12 Nov 2020, 12:03 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கிய சில்லறை விற்பனை நிறுவனமான LuLu குழுமம் தங்கள் நிறுவனத்தின் பெயரில் ஒரு பொய்யான பிரச்சாரத்தை நடத்தி வரும் புதிய போலி வலைத்தளம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தங்களின் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

போலி வலைத்தளமானது LuLu குழுமத்தை பற்றிய நுகர்வோரின் கருத்துக்களைத் தேடும் ஒரு கணக்கெடுப்பைக் கொண்டுள்ளது. கணக்கெடுப்பு முடிந்ததும், அந்த வலைதளத்தில் பதிலளித்தவர்களுக்கு 250 யூரோ கூப்பன் வெகுமதியாக வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பதிலளித்தவர்கள் கூப்பனைக் கோர கிளிக் செய்யும் போது, ​​கூப்பனைக் கோர அவர்கள் அதை 20 நண்பர்கள் அல்லது வாட்ஸ்அப்பில் ஐந்து குழுக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலைத்தளம் கோருகிறது.

இது ஒரு மோசடி வலைத்தளம் என்பதை உறுதிப்படுத்திய Lulu குரூப் இன்டர்நேஷனலின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் வி.நந்தகுமார், சமூக ஊடகங்களில் பரவி வரும் இதுபோன்ற போலி செய்திகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்து நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

“இதேபோன்ற மோசடி மற்றும் போலி செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம், மேலும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம். இதுபோன்ற மோசடியில் விழாமல் இருக்க அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று நந்தகுமார் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அவர் நாங்கள் எங்கள் அதிகாரப்பூர்வ மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்குகள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்கிறோம் என்றும் வாடிக்கையாளர்களுக்கு அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.