ADVERTISEMENT

அபுதாபியில் திறக்கப்படவுள்ள 10,000க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை கொண்ட “Butterfly Gardens”..!!

Published: 5 May 2025, 6:42 PM |
Updated: 5 May 2025, 6:48 PM |
Posted By: Menaka

அபுதாபி எமிரேட்டானது சுற்றுலாவாசிகள் மற்றும் குடியிருப்பாளர்களை ஈர்க்க முதல் அதிவேக பட்டாம்பூச்சி சரணாலயத்தை திறக்க உள்ளது. அபுதாபியில் வருகின்ற செப்டம்பர் 2025 இல் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் நிறைந்த பட்டர்ஃப்ளை கார்டன்ஸ் (Butterfly gardens) திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியின் அல் கானாவில் உள்ள நேஷனல் அக்வாரியத்திற்கு அடுத்ததாக அமைக்கப்பட்டு வரும் இந்த கார்டன், இயற்கையை மையமாகக் கொண்ட அனுபவத்தை வழங்கும் மற்றும் எமிரேட் சுற்றுலா காட்சியில் ஒரு முக்கியமான புதிய ஈர்ப்பாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது.

10,000 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளுக்கான சரணாலயம்

பட்டர்ஃப்ளை கார்டனின் பசுமையான வெப்பமண்டல சூழல்களில் சுமார் 10,000 பட்டாம்பூச்சிகளுக்கு மேல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் உலகெங்கிலும் இருந்து சுற்றுச்சூழல் அமைப்புகளை பிரதிபலிக்க வடிவமைக்கப்பட்ட காலநிலை கட்டுப்பாட்டு ‘bio-domes’ எனப்படும் குவிமாடம் வழியாக பார்வையாளர்கள் நடந்து செல்லும் அமைப்பும் இங்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த கார்டன் இரண்டு முக்கிய மண்டலங்களாக பிரிக்கப்படும்:

ஆசியா மண்டலம்- பியர் கேட்ஸ் (bearcats), கோய் கார்ப் (koi carp) மற்றும் பல்வேறு ஆசிய வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெறும்.
அமெரிக்கா மண்டலம்- இரண்டு கால் சோம்பல்கள் (two-toed sloths), கைமன் முதலைகள் (caiman crocodiles) மற்றும் அமெரிக்க பூச்சிகள்.

ADVERTISEMENT

கார்டனில் நடந்து செல்லும் போது, பட்டாம்பூச்சிகள் பார்வையாளர்களை சுற்றி சுதந்திரமாக பறக்கும், இது பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான மற்றும் சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டர்பிளை கார்டன் குறித்து தெரிவிக்கையில் பாதுகாப்பு மற்றும் கல்வியை ஆதரிப்பதற்காக உண்மையான இயற்கை வாழ்விடங்களை மீண்டும் உருவாக்குவதே இதன் குறிக்கோள் என்று பட்டர்ஃப்ளை கார்டனின் பொது மேலாளர் பால் ஹாமில்டன் கூறியுள்ளார்.

பட்டர்ஃப்ளை கார்டன் அபுதாபி கல்வி, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை இணைப்பதன் மூலம் எல்லா வயதினரும், குறிப்பாக குடும்பங்கள், மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை ஆராய அழைக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel