ADVERTISEMENT

UAE: குடிமக்கள் அல்லாத அரசு ஊழியர்களுக்கும் முழு “ஹவுசிங் அலவன்ஸ்”..!! அபுதாபி அரசின் அதிரடி அறிவிப்பு..!!

Published: 19 Nov 2020, 4:45 PM |
Updated: 19 Nov 2020, 4:45 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அபுதாபி அரசு தனது ஊழியர்களுக்காக புதிய வீட்டுக் கொள்கைகளை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய கொள்கையின்படி, அபுதாபி அரசு ஊடக அலுவலகம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்து கொண்ண்டுள்ளதன்படி, அபுதாபியில் அரசு நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டு அபுதாபியிலேயே வசிக்கும் ஊழியர்களுக்கு அவர்களின் வேலை தரத்தைப் பொறுத்து சிறப்பு சலுகைகளைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் வசிக்கும் அரசு ஊழியர்கள் அமீரக குடிமக்களாக (எமிராட்டி) இருந்தால் தங்கள் வேலை தரத்திற்கு ஏற்ப முழு வீட்டுவசதிக்கான உதவித்தொகையைப் பெறுவார்கள். அதே நேரத்தில் அபுதாபியில் சொத்து வைத்திருக்கும் அல்லது வாடகைக்கு வசித்து வரும் எமிராட்டி அல்லாத ஊழியர்கள் தங்கள் வேலை தரத்தின்படி முழு வீட்டு உதவித்தொகைக்கு தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், தகுதியான ஊழியர்களுக்கு அமீரகத்தில் உள்ள பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையும் கிடைக்கும் என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் நிலைமையை சரிசெய்ய போதுமான நேரம் கொடுப்பதற்காக இந்த புதிய கொள்கைகள் ஒரு வருடத்திற்குப் பிறகு செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT