ADVERTISEMENT

UAE : 3 PCR சோதனைக்கு 270 திர்ஹம் மட்டுமே கட்டணம்..!! சிறப்பு தள்ளுபடியை அறிவித்த மருத்துவமனைகள்..!!

Published: 20 Nov 2020, 1:06 PM |
Updated: 20 Nov 2020, 1:16 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்களின் சொந்த நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்யவுள்ளவர்கள், அலுவலகத்திற்கு திரும்பும் ஊழியர்கள் மற்றும் சில இடங்களில் கொரோனாவிற்கான எதிர்மறை சான்றிதழ் தேவையுடையவர்கள் என அனைவருக்கும் சமீபத்திய PCR சோதனை முடிவு தேவைப்படுகிறது. கொரோனா பரிசோதனைக்கான தேவை அதிகரித்து வருவதை தொடர்ந்து, அமீரகத்தில் இருக்கும் பல மருத்துவமனைகள் கொரோனா PCR சோதனைக் கட்டணத்திற்கு பல தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன.

ADVERTISEMENT

அமீரகத்தில் கொரோனா பரவத் தொடங்கிய காலத்தில், PCR சோதனைக்கான கட்டணம் 370 திர்ஹம்ஸ் ஆக இருந்தது. பின் செப்டம்பரில் 250 திர்ஹம்ஸ் ஆக குறைக்கப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு, அபுதாபியில் உள்ள கிளினிக்குகள் விலையை மேலும் 180 திர்ஹம்ஸ் ஆகக் குறைத்தன, அதே நேரத்தில் துபாயில் அரசு நடத்தும் மருத்துவமனைகள் PCR சோதனைக்கு 150 திர்ஹம்ஸ் கட்டணம் நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வரும் குடியிருப்பாளர்கள் அபுதாபிக்கு வந்த நான்காவது நாளிலும் எட்டாவது நாளிலும் PCR சோதனை மேற்கொள்வது கட்டாயம் ஆக்கியதை தொடர்ந்து அபுதாபியில் இருக்கும் மருத்துவமனைகள் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன.

ADVERTISEMENT

அவற்றுள் தற்பொழுது அபுதாபியில் இருக்கக்கூடிய The Advanced Centre for Daycare Surgery ​​மூன்று PCR சோதனைகளுக்கு 270 திர்ஹம்ஸ் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறது. மேலும், இரு PCR சோதனைகளுக்கு 185 திர்ஹம்ஸ் மற்றும் ஒரு நபர் மட்டுமே சோதனை மேற்கொள்ள விரும்பினால் 155 திர்ஹம்ஸும் கட்டணமாக வசூலிக்கிறது.

மருத்துவ மையத்தின் தலைமை நிர்வாகி மஹ்மூத் ஜுமா அவர்கள் இது பற்றி கூறுகையில், “துபாய்க்கு செல்லும் அபுதாபி குடியிருப்பாளர்கள் பொதுவாக மூன்று PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால், பல சோதனைகளுக்கு ஒரு சிறப்பு கட்டணத்தை அறிமுகப்படுத்த நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த மையம் ஜூலை மாதம் கொரோனாவிற்கான சோதனையைத் தொடங்கியது. மேலும் தினசரி 200 பேர் சோதனைக்காக இம்மையத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாரத்தில் தள்ளுபடி அறிவித்ததில் இருந்து எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அபுதாபி, அல் அய்ன் மற்றும் துபாயில் கொரோனாவிற்கான சோதனைகளை மேற்கொள்ளும் மெனலாப்ஸ் (MenaLabs) நிறுவனமும், தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அங்கு ஒரு சோதனைக்கு 99 திர்ஹம்ஸ் எனவும் இரண்டு சோதனைகளுக்கு 170 திர்ஹம்ஸ் மற்றும் மூன்று PCR சோதனைகளுக்கு 250 திர்ஹம்ஸும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.