ADVERTISEMENT

UAE : சூக் அல் ஜுமா எனும் வெள்ளிக்கிழமை சந்தையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து..!!

Published: 28 Nov 2020, 12:29 PM |
Updated: 28 Nov 2020, 12:29 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃபுஜைராவின் மசாபியில் உள்ள சூக் அல் ஜுமா (வெள்ளிக்கிழமை சந்தை) இல் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கிருக்கும் பல கடைகள் தீயில் சிக்கியதாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சூக் அல் ஜுமாவில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சென்று தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டதாகவும், மேலும் அருகிலுள்ள வளாகத்திற்கு தீ பரவுவதற்கு முன்பு தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்புக்கு குழு தெரிவிக்கையில், “இன்று அதிகாலை காவல்துறை செயல்பாட்டு அறைக்கு இந்த தீ விபத்து குறித்த தகவல்கள் கிடைத்தன. அதனை தொடர்ந்து உடனடியாக துணை மருத்துவர்களும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT