ADVERTISEMENT

UAE: இனி தண்ணீர் பாட்டில் வாங்கினால் Hand Sanitizer மற்றும் disinfecting wipes இலவசம்..!! பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க SEWGA நடவடிக்கை..!!

Published: 7 Dec 2020, 11:50 AM |
Updated: 7 Dec 2020, 11:52 AM |
Posted By: admin

கொரோனா பரவலைக் குறைப்பதற்கான சமூகப் பொறுப்பை அதிகரிப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முயற்சியில், ஷார்ஜா மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு ஆணையம் (SEWGA) தற்பொழுது புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இனி ஷார்ஜாவில் உள்ள அனைத்து சந்தாதாரர்களுக்கும் ஸுலால் பாட்டில் குடிநீருடன் (zulal bottled water) கிருமிநாசினி துடைப்பான்கள் (disinfecting wipes) மற்றும் ஹாண்ட் சானிடைசர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் உச்ச கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் உத்தரவுகளின்படி இது இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

“ஷார்ஜா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான” SEWGA இன் திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (திங்கள்கிழமை) முதல், சுத்திகரிப்பு பொருட்களானது தண்ணீர் பாட்டிலுடன் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SEWGA இன் தலைவர் டாக்டர் ரஷீத் அலீம் அவர்கள் இது குறித்து கூறுகையில், குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT