ADVERTISEMENT

பொருட்களுக்கு 80 % வரை அதிரடி தள்ளுபடி.. அமீரகத் தலைநகரின் முதல் ஷாப்பிங் சீசன்..!! சுமார் 3,500 சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட மால்கள் பங்கேற்பு..!!

Published: 13 Dec 2020, 1:28 PM |
Updated: 13 Dec 2020, 1:31 PM |
Posted By: admin

துபாயில் ஒவ்வொரு வருடமும் குளிர்காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களில் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் மிகப்பிரம்மாண்டமான முறையில் துபாயில் இருக்கக்கூடிய அனைத்து மால்களிலும் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். தற்பொழுது துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) 26 வது பதிப்பானது டிசம்பர் 17 அன்று தொடங்கி அடுத்த வருடம் ஜனவரி 30 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் போது வாடிக்கையாளர்கள் துபாய் மால்களில் பல்வேறு பொருட்களை தள்ளுபடி விலையில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தற்பொழுது அதே போன்று, ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறையானது (Department of Culture and Tourism) ஒன்பது வாரங்களுக்கு நடைபெற இருக்கும் அபுதாபி ஷாப்பிங் சீசனை முதன் முதலாக தொடங்கியுள்ளது. இந்த ஷாப்பிங் சீசனில் வாடிக்கையாளர்கள் 80 சதவீதம் வரை பொருட்களுக்கு தள்ளுபடி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 10 ம் தேதி தொடங்கப்பட்ட இந்த அபுதாபி ஷாப்பிங் சீசனானது அடுத்த வருடம் பிப்ரவரி 14, 2021 வரை இயங்கும் என்றும், அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா முழுவதும் உள்ள மால்களில் பெரும்பாலான பொருட்களுக்கு 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெறவுள்ள இந்த அபுதாபி ஷாப்பிங் சீசனில் 3,500 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட மால்கள் பங்கேற்கின்றன.

அதே போல் துபாயில் நடைபெறவுள்ள துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் போது, இன்ஃபினிட்டி மெகா ரேஃபிள் ஒன்று நிகழ்த்தப்பட விருக்கின்றது. இதற்காக 200 திர்ஹம் மதிப்புள்ள டிக்கெட்டுகளை துபாயில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ENOC மற்றும் EPPCO பெட்ரோல் நிலையங்கள், ஜூம் ஸ்டோர்ஸ் (zoom stores) மற்றும் துபாய் மெட்ரோ நிலையங்களில் வாங்கலாம்.

ADVERTISEMENT

தி கோல்ட் சூக், குளோபல் வில்லேஜ் மற்றும் DSF நடைபெறும் ஷாப்பிங் மால்களில் 200 திர்ஹம் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு இன்ஃபினிட்டி QX60 கார் (Infiniti QX60) மற்றும் 200,000 திர்ஹம் பரிசு கிடைக்கவிருக்கும் ரேஃபிள் ல் கலந்துகொள்வதற்காக வாய்ப்பு கிடைக்கும். இந்த மெகா குலுக்கலானது குளோபல் வில்லேஜில் தினசரி நடைபெறும் நிலையில், DSF நடைபெறும் நாட்களில் மொத்தம் 45 வாகனங்கள் வழங்கப்படும் என்றும், DSF -ன் இறுதி நாளில் ஒரு நபர் 500,000 திர்ஹம் வெல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.