ADVERTISEMENT

2021, 2022ம் ஆண்டிற்கான பொது மற்றும் தனியார் துறைகளுக்கான விடுமுறையை அறிவித்த அமீரகம்..!!

Published: 19 Dec 2020, 4:08 PM |
Updated: 19 Dec 2020, 4:13 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புக்கு ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் வரவிருக்கின்ற 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ விடுமுறை நாட்காட்டியை இன்று (சனிக்கிழமை) ஒப்புதல் அளித்தார்.

ADVERTISEMENT

அதனடிப்படையில் அறிவிக்கப்பட்ட 2021 மற்றும் 2022 ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை கீழே காணலாம்.

2021 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் தனியார் துறைக்கான உத்தியோகபூர்வ விடுமுறைகள் பின்வருமாறு:

  •  ஜனவரி 1, 2021 – புத்தாண்டு விடுமுறை.
  • ரமலான் 29 முதல் ஷவ்வால் 3,1442 வரை – ஈத் அல் பித்ர் விடுமுறை
  • துல் ஹஜ் 9,1442-அரபா நாள் விடுமுறை
  • துல்-ஹஜ் 10-11 -12 – ஈத் அல் அத்ஹா விடுமுறை
  • ஆகஸ்ட் 12, 2021 – ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறை
  • அக்டோபர் 21, 2021 – மீலாது நபி விடுமுறை.
  • டிசம்பர் 1, 2021 – தியாகிகள் நினைவு நாள்
  • டிசம்பர் 2-3, 2021 – தேசிய தின விடுமுறை.

2022 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் தனியார் துறை விடுமுறைகள் பின்வருமாறு:

  • ஜனவரி 1, 2022 – புத்தாண்டு விடுமுறை
  • ரமலான் 29 முதல் ஷவ்வால் 3,1443 வரை – ஈத் அல் பித்ர் விடுமுறை.
  • துல் ஹஜ் 9,1443-அரபா நாள் விடுமுறை
  • துல்-ஹஜ் 10-11 -12 – ஈத் அல் அத்ஹா விடுமுறை.
  • ஜூலை 30, 2022 – ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறை.
  • அக்டோபர் 8, 2022 -மீலாது நபி விடுமுறை.
  • டிசம்பர் 1, 2022 – தியாகிகள் நினைவு நாள்.
  • டிசம்பர் 2-3, 2022 – தேசிய தினம்.

 

ADVERTISEMENT