ADVERTISEMENT

DSF: பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி..!! துபாயில் 12 மணி நேரம் நடைபெற இருக்கும் SUPER SALE ..!!

Published: 20 Dec 2020, 4:42 PM |
Updated: 20 Dec 2020, 4:42 PM |
Posted By: admin

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில், DSF Super Sale எனக் கூறப்படும் 12 மணி நேரம் நடைபெறும் சிறப்பு விற்பனையில் பொருட்களுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையானது வரும் டிசம்பர் 26 அன்று துபாய் முழுவதும் உள்ள மஜித் அல் புட்டைம் (Majid Al Futtaim) மால்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சிறப்பு விற்பனையில் துபாயில் உள்ள மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates), சிட்டி சென்டர் மிர்டிஃப் (City Centre Mirdif), சிட்டி சென்டர் டேரா (City Centre Deira), சிட்டி சென்டர் மீ’ஐசெம் (City Centre Me’aisem), மை சிட்டி சென்டர் அல் பார்ஷா (My City Centre Al Barsha) மற்றும் சிட்டி சென்டர் அல் ஷிண்டாகா (City Centre Al Shindagha) ஆகிய இடங்களில் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என 12 மணி நேரம் மட்டுமே சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பேஷன் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குழந்தைகள் அணியும் உடைகள் போன்ற பலவற்றிற்கு தள்ளுபடி அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது நடைபெற்று வரும் DSF ன் 26 வது பதிப்பு அடுத்த வருடம் ஜனவரி 30 வரை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT