ADVERTISEMENT

UAE: குளிர்சாதனப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட பெரும் தீ விபத்து..!!

Published: 22 Dec 2020, 12:54 PM |
Updated: 22 Dec 2020, 12:56 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மானில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அங்கிருக்கும் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அஜ்மான் சிவில் டிஃபென்ஸின் தீயணைப்பு நிலையங்களின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் முஹம்மது அலி ஜுமேரா அவர்கள் கூறுகையில் அஜ்மான் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஏர் கண்டிஷனிங் கருவிகள் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் 5 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தீயணைப்பு வீரர்கள் ஷார்ஜா சிவில் பாதுகாப்புக்குழு உதவியுடன் தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிர்ஷ்டவசமாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டிருந்ததால் எவருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் தொழிற்சாலையில் உள்ள தயாரிப்புகள் மற்றும் பொருட்களில் 30 சதவீதம் மட்டுமே தீக்கு இரையாகியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இருக்கும் கட்டிடங்களில் உள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது அந்த தொழிற்சாலையில் குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்து விசாரணை நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT