ADVERTISEMENT

துபாயில் ‘Emirates Loves India’ கொண்டாட்டம்: நுழைவு இலவசம்! எங்கே, எப்போது உள்ளிட்ட முக்கிய விபரங்கள் உள்ளே…

Published: 17 Oct 2025, 8:12 PM |
Updated: 17 Oct 2025, 8:12 PM |
Posted By: Menaka

துபாயில் உள்ள இந்திய சமூகத்தினருக்கான தீபாவளி கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. அதன் வரிசையில் ‘Emirates Loves India’ எனும் தலைப்பில் ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இது இந்திய கலாச்சாரத்தின் மிகப்பெரிய கொண்டாட்டமாகும், மேலும் இது தீபாவளிக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு ஜபீல் பூங்காவில் அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக அரசு ஊடக அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, இந்தியாவின் சிறப்பம்சங்கள் கொண்ட மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அமீரக வாழ் இந்தியர்களுக்காக நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் இந்த ஒரு நாள் விழாவில் பின்வருவன இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது:

  • பாலிவுட் நட்சத்திரங்கள் நேஹா கக்கர், மிகா சிங் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோரின் நேரடி நிகழ்ச்சிகள்
  • இந்திய மக்கள் மன்றத்தின் (IPF) வண்ணமயமான கலாச்சார அணிவகுப்பு
  • 30க்கும் மேற்பட்ட பிராந்திய இந்திய உணவு வகைகள் மற்றும் உணவு கடைகள்
  • மாநில வாரியான கலாச்சார அரங்குகள், கண்காட்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான செயல்பாட்டு மண்டலம்

இவ்வாறு இசை, உணவு, கலாச்சாரம் மற்றும் குடும்ப நட்பு பொழுதுபோக்கு ஆகியவற்றின் கலவையுடன், இந்த நிகழ்வு இந்தியர்களை ஒன்றிணைத்து, இந்தியாவின் பன்முகத்தன்மையை ஐக்கிய அரபு அமீரகத்தில் பரந்த பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் நுழைவு இலவசம். ஆனாலும், இந்நிகழ்விற்கு செல்ல விரும்புபவர்கள் இதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள வாட்ஸ்அப் இணைப்பு வழியாக முன் பதிவு செய்வது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொண்டாட்டம் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான ஆழமான உறவுகளை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஏனெனில் 4.36 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் அமீரகத்தில் வசிக்கின்றனர். மேலும் ஆரம்பகாலம் முதல் இன்று வரையிலும் அமீரகத்தின் வளர்ச்சியில் இந்திய சமூகம் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel