தொழில்முனைவோர் மற்றும் வணிகங்கள் இப்போது துபாயின் மெட்ரோ மற்றும் டிராம் நிலையங்களுக்குள் வணிக இடங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. எனவே, அங்கு கடை அமைக்க ஆர்வமுள்ளவர்கள் வணிக இடங்களை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பிக்கலாம்.
இந்த முயற்சி உள்ளூர் மற்றும் உலகளாவிய கடை உரிமையாளர்கள் துபாயின் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில் ஆயிரக்கணக்கான தினசரி பயணிகளை எளிதாக அடைய அனுமதிக்கிறது என கூறப்படுகின்றது. இதே போல் கடந்த காலத்தில் தனியார் நிறுவனங்களுடன் வெற்றிகரமான கூட்டாண்மைகளை உருவாக்கியுள்ளது மற்றும் உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்று RTA ஒரு அறிக்கையில் கூறியது.
வணிக இடங்களை குத்தகைக்கு எடுப்பது எப்படி?
ஆர்வமுள்ள வணிகங்கள் RTA வலைத்தளம் வழியாக பின்வரும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்:
- RTA வளைதளம் சென்று ‘Business and Corporate‘ பிரிவைப் பார்வையிடவும்.
- அடுத்ததாக, ‘Invest with RTA’ என்பதைத் தேர்ந்தெடுத்து முதலீட்டு வாய்ப்புகளைப் பார்க்கவும்.
- இப்போது, வாடகை, மின்சாரம், தடைசெய்யப்பட்ட வணிகங்கள் போன்ற விவரங்களை உள்ளடக்கிய கிடைக்கக்கூடிய இடங்களின் பட்டியலை பார்க்கலாம்.
அதுமட்டுமின்றி, இந்த வலைத்தளம் ஒவ்வொரு யூனிட்டின் 360 டிகிரி டிஜிட்டல் காட்சியை வழங்குகிறது. தங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்ய விரும்புவோர் தங்கள் RTA அக்கவுண்ட்டை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும், அதே நேரத்தில் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்பு மின்னஞ்சல் வழியாக கூடுதல் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
நிலையங்களுக்கு பெயரிடும் உரிமைகள்
இடங்களை குத்தகைக்கு எடுப்பதோடு மட்டுமல்லாமல், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மெட்ரோ நிலையங்களுக்கு பெயரிடும் உரிமைகளையும் பெறலாம், இது முதன்முதலில் 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கான்செப்ட் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு நிலையத்திற்கு ஒரு வணிகத்தின் பெயரிடப்படலாம். இதனடிப்படையில் துபாயில் பல்வேறு நிறுவனங்களின் பெயரின் மெட்ரோ நிலையங்கள் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel