பளபளப்பான மால்கள், பல்வேறு சலுகைகள் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற துபாய் இப்போது 31வது துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலுக்கு (DSF) தயாராகி வருகிறது. குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) 31வது பதிப்பு டிசம்பர் 5, 2025 முதல் ஜனவரி 11, 2026 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் DSF மெகா ரேஃபிள் மூலம் அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு ரேஃபிள் ட்ரா வெற்றியாளர்களுக்கு தினசரி வெகுமதிகளை உறுதியளிக்கிறது. அதன் படி, தினசரி ஒரு அதிர்ஷ்டசாலி நபர் புத்தம் புதிய நிசான் காரையும் 100,000 திர்ஹம்களையும் வெல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், கொண்டாட்டங்களை நிறைவு செய்யும் வகையில், விழாவின் இறுதி நாளில் ஒரு வெற்றியாளருக்கு 400,000 திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பங்கேற்பது?
ரேஃபிள் டிக்கெட்டுகள் 100 திர்ஹம்ஸ்க்கு கிடைக்கின்றன, மேலும் தஸ்ஜீல் மையங்கள், ENOC நிலையங்கள், ZOOM கடைகள் மற்றும் ஆட்டோப்ரோ சேவை விற்பனை நிலையங்களில் டிக்கெட் வாங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு டிக்கெட்டும் பங்கேற்பாளர்களுக்கு வெற்றி பெற இரண்டு வாய்ப்புகளை வழங்குகிறது. அதாவது தினசரி டிராக்களில் நுழையலாம் மற்றும் ஜனவரி 11, 2026 அன்று நடைபெறும் கிராண்ட் பரிசுக்கான டிராவில் தானாகவே சேர்க்கப்படுவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, தினசரி வெற்றியாளர்கள் Pathfinder, X-Terra, X-Trail, Kicks, அல்லது Magnite ஆகிய ஐந்து நிசான் மாடல்களில் ஒன்றையும், காருடன் சேர்த்து 100,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசையும் எடுத்துச் செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் மற்றும் கொண்டாட்ட விழா
இது குறித்து துபாய் ஃபெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட் (DFRE)இன் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் காஜா அவர்கள் கூறுகையில், DSF மெகா ராஃபிள் வருடாந்திர துபாய் ஷாப்பிங் விழாவின் ஒரு வரையறுக்கும் அம்சமாக மாறியுள்ளது என்று எடுத்துரைத்துள்ளார்.
மேலும், “DSF ஐ சில்லறை விற்பனையின் உலகளாவிய சின்னமாக மாற்றுவதற்கு உறுதியளித்த எங்கள் மூலோபாய கூட்டாளர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் இப்போது அதன் 31வது ஆண்டில், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு, வெல்ல முடியாத ஷாப்பிங் சலுகைகள் மற்றும் கலாச்சார அனுபவங்களை ஒருங்கிணைத்து, சில்லறை விற்பனையின் புதுமை மற்றும் உற்சாகத்திற்கான உலகளாவிய மையமாக நகரத்தின் நிலையை வலுப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel