ADVERTISEMENT

துபாய்: புதிய பகுதிகளில் கட்டண பார்க்கிங் வசதியை அறிமுகப்படுத்திய பார்க்கின்!!

Published: 31 Oct 2025, 4:07 PM |
Updated: 31 Oct 2025, 4:07 PM |
Posted By: Menaka

துபாயின் மிகப்பெரிய பொது பார்க்கிங் ஆப்பரேட்டரான பார்கின் PJSC, அதன் கட்டண பார்க்கிங் நெட்வொர்க்கை மேலும் இரண்டு இடங்களுக்கு விரைவுபடுத்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி துபாய் ஸ்டுடியோ சிட்டி மற்றும் துபாய் அவுட்சோர்ஸ் சிட்டி ஆகிய இரண்டு புதிய பகுதிகளுக்கு கட்டண பார்க்கிங்கை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதுப்பிப்பு அக்டோபர் 31 அன்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்களில் பகிரப்பட்டது.

ADVERTISEMENT

பார்கின் கூற்றுப்படி, T-குறியீடு அமைப்பின் கீழ் செயல்படும் புதிய கட்டண பார்க்கிங் மண்டலங்களைக் குறிக்க தெளிவான அடையாள பலகைகள் நிறுவப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

புதிய பார்க்கிங் கட்டணங்கள்

துபாய் ஸ்டுடியோ சிட்டி (மண்டல குறியீடு 675T) மற்றும் துபாய் அவுட்சோர்ஸ் சிட்டி (மண்டல குறியீடு 812T) இரண்டும் ஒரே கட்டண அமைப்பைப் பின்பற்றும்:

ADVERTISEMENT
  • 30 நிமிடங்களுக்கு 2 திர்ஹம்ஸ்
  • 1 மணி நேரத்திற்கு 4 திர்ஹம்ஸ்
  • 2 மணி நேரத்திற்கு 8 திர்ஹம்ஸ்
  • 3 மணி நேரத்திற்கு 12 திர்ஹம்ஸ்
  • 4 மணி நேரத்திற்கு 16 திர்ஹம்ஸ்
  • 5 மணி நேரத்திற்கு 20 திர்ஹம்ஸ்
  • 6 மணி நேரத்திற்கு 24 திர்ஹம்ஸ்
  • 7 மணி நேரத்திற்கு 28 திர்ஹம்ஸ்
  • 24 மணி நேரத்திற்கு 36 திர்ஹம்ஸ்

சந்தா விருப்பங்கள்

இப்பகுதியில் பணிபுரியும் குடியிருப்பாளர்களுக்கு மாதாந்திர மற்றும் நீண்ட கால பார்க்கிங் சந்தாக்களும் கிடைக்கின்றன:

  • 315 திர்ஹம்ஸ் – 1 மாதம்
  • 840 திர்ஹம்ஸ் – 3 மாதங்கள்
  • 1,680 திர்ஹம்ஸ் – 6 மாதங்கள்
  • 2,940 திர்ஹம்ஸ் – 12 மாதங்கள்

பார்கினின் பரந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதி

இந்த நடவடிக்கை பார்கின் நிறுவனம் துபாய் முழுவதும் கட்டண பார்க்கிங் மண்டலங்களை விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக வருகிறது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில், இந்த நிறுவனம் அல் ஜடாஃப் இல் புதிய பார்க்கிங் பகுதிகளை அறிமுகப்படுத்தியது, மண்டலம் 326C (ஆன்-ஸ்ட்ரீட்) மற்றும் மண்டலம் 326D (ஆஃப்-ஸ்ட்ரீட்) ஆகியவற்றைச் சேர்த்தது, இந்த மண்டலங்களில் கட்டணங்கள் நெரிசல் இல்லாத மற்றும் நெரிசலான நேரங்களைப் பொறுத்து மாறுபடும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

ADVERTISEMENT

அதே மாதத்தில், நகரம் முழுவதும் 59 மசூதிகளுக்கு அருகிலுள்ள 2,100 பார்க்கிங் இடங்களையும் பார்கின் கையகப்படுத்தியது. அங்கு தொழுகை நேரங்களில் வழிபாட்டாளர்களுக்கு ஒரு மணிநேரம் இலவச பார்க்கிங் வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் இந்த நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் வழக்கமான கட்டண பார்க்கிங் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel