ADVERTISEMENT

UAE: பிக் டிக்கெட் டிராவில் தமிழருக்கு அடித்த யோகம்!! 25 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட் பரிசை வென்றதால் மகிழ்ச்சி..

Published: 4 Nov 2025, 10:28 AM |
Updated: 4 Nov 2025, 10:29 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் நேற்று (திங்கட்கிழமை, நவம்பர் 3) நடைபெற்ற பிக் டிக்கெட் அபுதாபி டிராவில் இந்தியர் ஒருவர் 25 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட் பரிசை வென்ற வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒரே நாளில் மல்டி மில்லியனராக மாற்றும் ரொக்கப் பரிசை வென்ற சரவணன் வெங்கடாசலம் என்பவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

பல ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வரும் சரவணன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிக் டிக்கெட் குறித்து சக ஊழியரிடம் கேள்விப்பட்ட பிறகு வாங்கத் தொடங்கியிருக்கிறார். தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, சமீபத்திய டிராவில் 463221 என்ற டிக்கெட் எண்ணுடன் ரொக்கப் பரிசை வென்று, இந்த மாதத்தின் முதல் பரிசைப் பெற்றுள்ளார்.

“சில சமயங்களில் நான் தனியாகவும், சில சமயங்களில் நண்பர்களுடன் சேர்ந்தும் டிக்கெட்டுகளை வாங்கினேன்,” என்று தெரிவித்த 44 வயதான பொறியாளர் சரவணன், “உங்களால் தனியாக ஒரு டிக்கெட் வாங்க முடியாவிட்டாலும், நண்பர்களுடன் சேர்ந்து வாங்கலாம்” என மற்றவர்களையும் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்ய ஊக்குவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், பரிசுத் தொகையை எப்படிப் பயன்படுத்துவது என்று குடும்பத்தினருடன் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறிய சரவணன், ஒரு பகுதி குழந்தையின் கல்விக்காகவும், மீதமுள்ளவை எதிர்காலத்திற்காக முதலீடு செய்யப்படும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

சரவணன் மட்டுமின்றி, பல அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர்களும் அதே டிராவில் பெரிய வெற்றிகளுடன் வெளியேறினர்:

ADVERTISEMENT
  1. ஷார்ஜாவைச் சேர்ந்த லாசர் ஜோசப் என்பவர், ‘பிக் வின்’ போட்டியில் 110,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசை பெற்றுள்ளார் மற்றும் 14 பேருடன் தனது பரிசைப் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
  2. அடுத்ததாக, தியாகராஜன் பெரியஸ்வாமி 130,000 திர்ஹம்ஸ் வென்றார், 10 ஆண்டுகளாக அபுதாபியில் வசிக்கும் இவர் ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ளார்.
  3. அல் அய்னைச் சேர்ந்த முகமது இலியாஸ் 150,000 வென்றார் மற்றும் அவர் தனது பரிசை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாக கூறினார்.
  4. இஜாஸ் யூனுசும் டிராவில் வென்றதுடன் l பத்து நண்பர்களுக்கு தனது வெற்றிகளை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். மேலு, தனது பங்கில் மனைவி மற்றும் குழந்தைக்கு பரிசுகளை வாங்க திட்டமிட்டுள்ளார்.
  5. டிரீம் கார் டிராவில், அல் அய்னில் இருந்து வந்த ஒரு வங்கதேச நாட்டை சேர்ந்த நபர் (டிக்கெட் எண் 008475) புத்தம் புதிய நிசான் காரை தட்டிச் சென்றுள்ளார்.

அடுத்த டிராவும் பரிசுகளும்

பிக் டிக்கெட் பங்கேற்பாளர்களுக்கு இந்த நவம்பரில் இன்னும் பல பரிசுகள் உள்ளன. அதாவது, நவம்பர் 1 மற்றும் 21க்குள் டிக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் தானாக ஒரு சிறப்பு இ-டிராக்குள் நுழைவார்கள், இதில் 30 வெற்றியாளர்கள் தலா 10,000 திர்ஹம்ஸ் மற்றும் செலவு ஏதுமின்றி ரேஸ் மற்றும் சொகுசு படகு (Race and Luxury Yacht) அனுபவத்தைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மூன்று இரவு தங்குதல், யாஸ் மெரினா ரேஸ் டிக்கெட் (டிசம்பர் 6–7), கான்செர்ட் பாஸ்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவை அடங்கும். அமீரகத்திற்கு வெளியில் இருந்து வெற்றி பெறுபவர்கள் இலவச விமானங்கள் மற்றும் விமான நிலைய இடமாற்றங்கள் பெறுவார்கள்.

yacht அனுபவத்தின் போது, ​​அனைத்து 30 வெற்றியாளர்களும் இரண்டு நாட்களிலும் நேரலையாக அறிவிக்கப்படும் 250,000 திர்ஹம்ஸ் வெகுமதி உட்பட கூடுதலான ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்து 30 வெற்றியாளர்களும் டிசம்பர் 3 நேரடி டிராவுக்கு தானாகவே தகுதி பெறுவார்கள், இதில் கிராண்ட் 25 மில்லியன் திர்ஹம் ஜாக்பாட் மற்றும் பத்து 100,000 திர்ஹம் ஆறுதல் பரிசுகள் உள்ளன.

டிரீம் கார் தொடர் & டிக்கெட் சலுகைகள்

மேற்கூறியவற்றுடன் பிக் டிக்கெட் அதன் ட்ரீம் கார் தொடரை தொடர்கிறது, டிசம்பரில் மசெராட்டி கிரேகேல் மற்றும் ஜனவரியில் BMW 430i வழங்கப்படும்.

இந்த மாத சிறப்பு டிக்கெட் தொகுப்பு சலுகை:

  • 2 பிக் டிக்கெட்டுகளை வாங்கினால் 2 இலவசம்
  • 2 டிரீம் கார் டிக்கெட்டுகளை வாங்கினால் 2 இலவசம்

மிகப்பெரிய ஜாக்பாட்கள், ஆடம்பர அனுபவங்கள் மற்றும் வாழ்க்கையை மாற்றும் பரிசுகளுடன், பிக் டிக்கெட் அபுதாபி பங்கேற்பாளர்களின் கனவுகளை நிஜமாக மாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel