ADVERTISEMENT

முசந்தத்தில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. அமீரகத்திலும் உணரப்பட்டதாக தகவல்!!

Published: 4 Nov 2025, 6:08 PM |
Updated: 4 Nov 2025, 6:08 PM |
Posted By: Menaka

ஓமானின் முசாந்தமின் தெற்கே இன்று (நவம்பர் 4, செவ்வாய்க்கிழமை) 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தில் (NCM) உள்ள தேசிய நில அதிர்வு வலையமைப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலநடுக்கம் ஐக்கிய அரபு அமீரக நேரப்படி பிற்பகல் 4:40 மணிக்கு 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. நிலநடுக்கத்தின் போது, அமீரகத்தின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் லேசான அதிர்வுகளை உணர்ந்தாலும், இந்த நிகழ்வு நாட்டிற்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

சமீபத்திய மாதங்களாக அமீரகத்திற்கு அருகில் இதுபோன்ற பூகம்பங்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் கூட 2.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஓமானின் மதா பிராந்தியத்தை தாக்கியது, இது அமீரகத்தால் சூழப்பட்ட ஓமானியப் பகுதி. அதன் பிறகு அந்த மாதத்தின் பிற்பகுதியில், ஆகஸ்ட் 22 அன்று, ஃபுஜைராவின் சஃபாத் பகுதியில் மற்றொரு 3.3-அளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அமீரகத்தின் நில அமைப்பு

அமீரகம் ஒரு பெரிய பூகம்ப மண்டலத்தில் இல்லை என்றாலும், உலகின் மிகவும் நில அதிர்வு ரீதியாக செயல்படும் பகுதிகளில் ஒன்றான ஜாக்ரோஸ் மலைத்தொடருக்கு அருகாமையில் இருப்பதால் சில நேரங்களில் சிறிய நிலநடுக்கங்கள் உணரப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் இது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT