ஐக்கிய அரபு அமீரகம் தனது 54வது தேசிய தினக் (ஈத் அல் எதிஹாத்) கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில், துபாய் எமிரேட் ஒரு மாத கால கொண்டாட்ட மையமாக மாற உள்ளது. நவம்பர் 3 முதல் டிசம்பர் 3 வரை கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் முதல் வானவேடிக்கை மற்றும் ட்ரோன் காட்சிகள் வரை நகரம் முழுவதும் உள்ள 25 இடங்களில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி தினத்தன்று (நவம்பர் 3) தொடங்கி ஈத் அல் எதிஹாத் (டிசம்பர் 2) வரை கொண்டாட்டங்கள் தொடரும் என்றும், இது அமீரகத்தின் ஸ்தாபக தந்தைகளான ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் ஆகியோரைக் கௌரவிக்கும் #ZayedAndRashid என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது.
துபாய் அரசாங்க ஊடக அலுவலகத்தின் படைப்பாற்றல் பிரிவான பிராண்ட் துபாய் தலைமையில் நடத்தப்படும் இந்த ஆண்டு பிரச்சாரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒற்றுமை, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது.
சிறப்பம்சங்கள்: 25 துபாய் தேசிய தின கொண்டாட்டங்கள்
- கலை மற்றும் வடிவமைப்பிற்கான அல் சஃபா நூலகம் – நவம்பர் 3–டிசம்பர் 2 வரை கவிதை வாசிப்பு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய இசை போன்ற நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம். ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மற்றும் வெள்ளி காலை 8 மணி முதல் நண்பகல் வரை திறக்கப்பட்டிருக்கும். மேலும், சனிக்கிழமை மூடப்பட்டிருக்கும். இடம்: அல் வாஸ்ல் சாலை, ஜுமேரா 3. (800 33222).
- அமீரகக் கொடி தோட்டம், உம்மு சுகீம் கடற்கரை – அக்டோபர் 31–ஜனவரி 10, தேசிய தினத்திற்கான தேசிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக துபாயின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான புர்ஜ் அல் அரபின் அருகில் ஆயிரக்கணக்கான கொடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளதை இலவசமாகப் பார்க்கலாம். சனிக்கிழமை மூடப்படும்.
- நாத் அல் ஷெபா மால் – நவம்பர் 14–டிசம்பர் 7 வரை மாலை 4 மணி – இரவு 11 மணி வரை இருக்கும். துபாயின் இந்த புதிய பெரிய மால் பல்வேறு செயல்பாடுகளை நடத்துகிறது.
- ஹத்தா ஹெரிட்டேஜ் வில்லேஜ் – நவம்பர் 15–டிசம்பர் 3, ஏழு முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான குளிர்கால முகாம் மற்றும் பாரம்பரிய ஒர்க் ஷாப் நடைபெறும்.
- அல் ஃபஹிதி ஹிஸ்டோரிக்கல் வில்லேஜ் – நவம்பர் 15 சனிக்கிழமை முதல் டிசம்பர் 3 புதன்கிழமை வரை நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பிரதிபலிக்கும் கொண்டாட்டங்களை நடத்தும்.
- குளோபல் வில்லேஜ் – நவம்பர் 27–டிசம்பர் 3 வரையிலான தேசிய தின விழாக்களில் கண்கவர் வானவேடிக்கைகள், வண்ணமயமான ட்ரோன் நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். டிசம்பர் 1 திங்கள், செவ்வாய் டிசம்பர் 2 மற்றும் புதன்கிழமை டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு அமீரகக் கொடியின் வண்ணங்களில் வானவேடிக்கைகள் இரவு வானத்தை ஒளிரச் செய்யும். டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் ட்ரோன் நிகழ்ச்சி நடைபெறும். நுழைவுக் கட்டணம் 25 திர்ஹம்ஸ் ஆகும். ஞாயிறு – புதன் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை இயங்கும். வியாழன் – சனி மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை செயல்படும். globalvillage.ae (04 362 4114).
- முகமது பின் ரஷீத் நூலகம் – நவம்பர் 27 வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை முகமது பின் ரஷீத் நூலகம் அதன் குளிர்கால விழாவை ஏற்பாடு செய்யும். நவம்பர் 25 செவ்வாய் மற்றும் நவம்பர் 26 புதன்கிழமைகளில் எமிராட்டி திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு நாட்கள் ஒர்க் ஷாப்களையும் நடத்துகிறது.
- எக்ஸ்போ சிட்டி துபாய் – நவம்பர் 28 வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் 2 செவ்வாய் வரை எக்ஸ்போ சிட்டியில் நேரடி நிகழ்ச்சிகள், ‘Dhai Dubai’ ஒளி விழா மற்றும் முதல்முறையாக ‘Festival of Cake’ நடைபெறும்.
- அல் ஷிந்தகா அருங்காட்சியகம் – நவம்பர் 29 சனிக்கிழமை முதல் டிசம்பர் 3 புதன்கிழமை வரை தேசிய கொண்டாட்டங்களை நடத்துகிறது. தேசிய தினத்தன்று, அல் ஷிந்தகா பகுதியில் சிறப்பு ஒளி காட்சி நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
- இபின் பட்டுடா மால் – டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கொண்டாட்டங்கள் நடைபெறும்.
- துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ்– டிசம்பர் 1 திங்கள் முதல் டிசம்பர் 4 வியாழன் வரை நிகழ்வுகளை நடத்தும். சிறப்பு பொழுதுபோக்கு மற்றும் சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
- புர்ஜ் கலீஃபா – டிசம்பர் 2 அன்று பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
- பாம் ஜுமேரா மால் – டிசம்பர் 2 அன்று மால் முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்தப்படும்.
- தி அவுட்லெட் வில்லேஜ் மால் – டிசம்பர் 2 அன்று மாலில் கொண்டாட்டங்கள் இடம்பெறும்.
- டிராகன் மார்ட், இன்டர்நேஷனல் சிட்டி – டிசம்பர் 2ஆம் தேதி தேசிய தின விழாக்களை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- சர்க்கிள் மால், JVC – டிசம்பர் 2, யூனியன் தினத்தன்று ஈத் அல் எதிஹாட் கொண்டாட்டங்களை நடத்தும்.
- சூக் அல் சீஃப் (துபாய் க்ரீக்) – டிசம்பர் 2, பாரம்பரிய சந்தை மற்றும் வானவேடிக்கைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்
- ஜுமைரா பீச் ரெசிடென்சஸ் (JBR) – டிசம்பர் 2 அன்று கடற்கரையோர கொண்டாட்டங்களை அனுபவிக்கலாம்.
- புளூவாட்டர்ஸ் ஐலேண்ட்– டிசம்பர் 2, அய்ன் துபாய்க்கு அருகில் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களை எதிர்பார்க்கலாம்..
- துபாய் பொது நூலகம், ஜுமேரா 3 – டிசம்பர் 2 அன்று தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எதிஹாத் மியூசியம், ஜுமேரா 1 – டிசம்பர் 2, தேசிய தினத்தன்று புரொஜெக்ஷன் மேப்பிங் மற்றும் வரலாற்று கண்காட்சிகளை எதிர்பார்க்கலாம்.
- அல் கவானீஜ் வாக் & லாஸ்ட் எக்ஸிட் – டிசம்பர் 2 செவ்வாய் மற்றும் டிசம்பர் 3 புதன்கிழமைகளில் கொண்டாட்டங்களை நடத்தும்.
- சில்ட்ரன்ஸ் சிட்டி, க்ரீக் பூங்கா –மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை மற்றும் டிசம்பர் 3 ஆம் தேதி தேசிய கொண்டாட்டங்களை நடத்தும். குறிப்பாக, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் இடம்பெறும்.
- முஷ்ரிஃப் பூங்கா – டிசம்பர் 2–3 ஆகிய தேதிகளில், முஷ்ரிஃப் பூங்கா குடும்பத்திற்கு ஏற்ற நிகழ்வுகளை நடத்தும்.
- துபாய் ஃபிரேம் – டிசம்பர் 2–3 (மாலை 4–7), சிறப்பு மாலை நிகழ்ச்சிகள் மற்றும் ஒளி காட்சிகள் இடம்பெறும்.
துபாய் ஊடக கவுன்சிலின் துணைத் தலைவர் மோனா கானெம் அல் மர்ரி, இது போன்று கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேசிய மாத பிரச்சாரம் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான சமூக ஊடக ஈடுபாடுகளை ஈர்த்தது என்றும், இந்த செயல்பாடுகள் சமூகத்தின் தேசத்தின் மீதான அன்பையும் பெருமையையும் வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel