ADVERTISEMENT

அனைத்து அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கும் 2021-ம் ஆண்டின் முதல் பொது விடுமுறையை அறிவித்த அமீரக அரசு..!!

Published: 29 Dec 2020, 11:50 AM |
Updated: 29 Dec 2020, 12:19 PM |
Posted By: admin

புத்தாண்டானது இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கவிருப்பதை முன்னிட்டு அமீரகம் முழுவதும் பல்வேறு வகையில் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், வரவிருக்கும் 2021 ம் ஆண்டின் முதல் பொது விடுமுறையானது ஐக்கிய அரபு அமீரக அரசால் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், ஜனவரி 1 2021, வெள்ளிக்கிழமை அன்று புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புத்தாண்டு விடுமுறையானது அமீரகத்தின் அதிகாரபூர்வ வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT