ADVERTISEMENT

வெளிநாட்டிலிருந்து அமீரகம் வந்த சிலருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு..!! உறுதி செய்த NCEMA..!!

Published: 29 Dec 2020, 4:58 PM |
Updated: 29 Dec 2020, 5:10 PM |
Posted By: admin

பிரிட்டனில் கடந்த சில வாரத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட வடிவத்தில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஐக்கிய அரபு அமீரகம் கண்டறிந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அமீரகத்தின் தேசிய நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் “குறுகிய எண்ணிக்கையிலான” புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்புகள் அமீரகத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒமர் அல் ஹம்மாடி கூறுகையில், சுகாதாரத் துறையின் தொடர்ச்சியான சோதனைகளுக்கு பிறகு நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வழக்குகள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை மேலாண்மை ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT