ADVERTISEMENT

அமீரகத்தில் காலாவதியான டூரிஸ்ட் விசாக்களின் செல்லுபடி காலம் நீட்டிப்பு..!! அமர் சென்டர் தகவல்..!!

Published: 6 Jan 2021, 1:09 PM |
Updated: 6 Jan 2021, 1:11 PM |
Posted By: admin

புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் சுற்றுலாவாசிகளின் விசாக்களை எந்த அரசாங்க கட்டணமும் இன்றி ஒரு மாதத்திற்கு நீட்டிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் சமீபத்தில் உத்தரவு அளித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அமீரகத்தில் டிசம்பர் 19 முதல் ஜனவரி 15 வரை காலாவதியாகக்கூடிய சுற்றுலா விசாக்களின் செல்லுபடி காலம், ஜனவரி 26 வரை நீடிக்கப்பட்டிருப்பதாக ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் (GDRFA) கால் சென்டர் (Amer) தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சில சுற்றுலாப் பயணிகள் தங்கள் விசாக்கள் தானாக நீட்டிக்கப்பட்டுள்ளது என தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். டிசம்பர் 19 க்குப் பிறகு காலாவதியான ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் www.amer.ae என்ற லிங்கில் சென்று தங்களின் விசா நிலையை அறிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதல் தகவலைப் பெற விரும்புபவர்கள் அமர் சென்டரை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT