ADVERTISEMENT

UAE: இதுவரை இல்லாத அளவு உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்புகள்..!! ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2000 ஐ கடந்தது..!!

Published: 6 Jan 2021, 2:00 PM |
Updated: 6 Jan 2021, 2:00 PM |
Posted By: admin

கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது உச்ச கட்ட எண்ணிக்கையை எட்டியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, ஜனவரி 6, 2021) புதிதாக 2,067 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 218,766 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 689 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 2,199 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 195,520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான இலவச தடுப்பூசி பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டு அதனை முன்னிட்டு, தற்பொழுது வரை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹொசானி அவர்கள் “இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது நாட்டில் பொதுவாக கொரோனா நோய் தொற்றுக்களை குறைக்கவும், குறிப்பாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டவர்களை குறைக்கவும், அடுத்த கட்டத்தில் நோயை சிறப்பாக கட்டுப்படுத்தவும் உதவும்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT