ADVERTISEMENT

அமீரகம், கத்தார் இடையே நாளை முதல் மீண்டும் போக்குவரத்து துவக்கம்..!!

Published: 8 Jan 2021, 12:03 PM |
Updated: 8 Jan 2021, 12:07 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் கடந்த ஜனவரி 5 ம் தேதி நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உச்சி மாநாட்டில் கத்தாருடன் மீண்டும் சுமூக உறவுக்கு ஒத்துழைப்பதாக வளைகுடா நாடுகளின் தலைவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ADVERTISEMENT

அந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் இடையே வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஒரு வாரத்திற்குள் மீண்டும் துவங்கப்படும் என அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் அன்வர் கர்காஷ் அவர்கள் தெரிவித்திருந்தார்.

 

ADVERTISEMENT

இந்நிலையில் கத்தார் நாட்டுடன் தனது நில, கடல், வான் வழி போக்குவரத்தை நாளை (ஜனவரி 9, சனிக்கிழமை) முதல் திறப்பதாக அமீரக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து கடந்த 2017 ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டிருந்த தடையானது நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT