ADVERTISEMENT

UAE: அல் அய்ன், அல் தஃப்ரா உட்பட 105 மையங்களில் இலவச கொரோனா தடுப்பூசியை வழங்கும் அபுதாபி..!!

Published: 11 Jan 2021, 4:41 PM |
Updated: 11 Jan 2021, 4:41 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் வழங்கப்பட்டு வரும் இலவச கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தற்போது அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா உட்பட அபுதாபி முழுவதும் 105 இடங்களில் இலவசமாக வழங்கப்படுவதாக அபுதாபி அரசு ஊடக அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி அரசு ஊடக அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அந்த செய்தியில் “உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இன்றே தடுப்பூசி போடுவதைத் தேர்வுசெய்யுங்கள்” என்று ட்வீட் செய்துள்ளது. இந்த இலவச கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெறுவதற்கு முன் அனுமதி ஏதும் அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை தவிர மற்ற அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
  • கர்ப்பிணி பெண்கள்
  • நர்சிங் தாய்மார்கள்
  • நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோய்கள் உள்ளவர்கள்
  • மூன்று மாதங்களுக்குள் கர்ப்பமாக இருக்க திட்டமிடும் பெண்கள்
  • 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
  • எந்தவொரு தடுப்பூசி, உணவு, மருந்து அல்லது பொருளுக்கும் ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சுய ஊசி போடக்கூடிய அட்ரினலின் கொண்டு வருபவர்கள்.

அபுதாபி முழுவதும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் மருத்துவ மையங்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் மஜ்லிஸ் போன்றவற்றின் விபரங்கள் மற்றும் இருப்பிடத்தை அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.