ADVERTISEMENT

அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று பெய்த கனமழை: வாகன ஓட்டிகளுக்கு தேசிய வானிலை மையம் அறிவுறுத்தல்.!!

Published: 9 Jan 2026, 8:47 PM |
Updated: 9 Jan 2026, 8:47 PM |
Posted By: Menaka

இன்று ஜனவரி 9, வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளதாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும் கனமழை தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் NCM பகிர்ந்துள்ளது. இதனால், பல பிராந்தியங்களில் சாலைகளும், தெரிவுநிலையும் பாதிக்கப்பட்டதாவும் NCM குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

NCMஆல் பகிரப்பட்ட வீடியோக்களில், நாடு முழுவதும் மழை வெள்ளத்தில் நனைந்த சாலைகள், மேகமூட்டமான வானம் மற்றும் கனமழை கொட்டித் தீர்க்கும் காட்சிகளைக் காணமுடிகிறது. மேலும், சில பகுதிகளில், மழையின் காரணமாக சாலைகளில் நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டியதா கூறப்படுகிறது.

ஃபுஜைராவிலிருந்து பரவலாகப் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், பலத்த காற்று மற்றும் கனமழையால் மழைநீர் தொடர்ந்து தேங்கியிருந்ததும், இதனால் பல கார்கள் தொடர்ந்து இயங்க முடியாமல் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருப்பதும் வீடியோவில் பார்க்க முடிகிறது.

ADVERTISEMENT

அதேபோல், ராஸ் அல் கைமாவில், மலைகளின் மீது தாழ்வான மேகங்கள் சூழ்ந்திருப்பதும், சாலைகளில் மழைநீர் குட்டைகளாகத் தேங்கியிருப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனால் வாகனங்கள் பகுதியளவு வெள்ளத்தில் மூழ்கியிருந்த சாலைகளில் கவனமாக வாகனத்தை இயக்கியுள்ளனர்.

இத்தகைய சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய வானிலை மையம், முற்றிலும் அவசியமின்றி வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறும், மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. சாலையில் தெரிவுநிலை குறையும்போது குறைந்த ஒளி கொண்ட முகப்பு விளக்குகளைப் பயன்படுத்துமாறும் ஓட்டுநர்களுக்கு நினைவூட்டப்பட்டது.

ADVERTISEMENT

முன்னதாக, NCM வெள்ளிக்கிழமை அன்று வானம் தெளிவாகவோ அல்லது ஓரளவு மேகமூட்டத்துடனோ காணப்படும் என்றும், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் தாழ்வான மேகங்கள் காணப்படும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணித்திருந்தது. மழை பெய்தபோதிலும், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை, குறிப்பாக கடலோரப் பகுதிகளில் ஈரப்பதமான நிலைமைகள் நிலவும் என்றும், மூடுபனி உருவாக வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

து போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel