ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா எமிரேட்டில் புதிய தொழில்முனைவோர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 1,000 திர்ஹமில் தொடங்கும் ஒரு புதிய குறைந்த கட்டண வணிக உரிமம் (commercial license) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த முயற்சி 2026 ஷார்ஜா தொழில்முனைவோர் விழாவின் (Sharjah Entrepreneurship Festival 2026) போது தொடங்கப்பட உள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விழாவின் ஒன்பதாவது பதிப்பு, வருகின்ற ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் ஷார்ஜா ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பூங்காவில் (Sharjah Research, Technology and Innovation Park) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வணிக நிறுவனம்’ (Business Establishment) எனப்படும் இந்த புதிய உரிமம், இந்த நிகழ்வின் போது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, விழா முழுவதும் பிரத்யேகமாகக் கிடைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த உரிமம், நிலைத்தன்மை, ஆக்கப்பூர்வமான தொழில்கள், கல்வித் தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தி, சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து ஆகிய ஆறு முன்னுரிமைத் துறைகளில் செயல்படும் ஸ்டார்ட்-அப் மற்றும் வளர்ந்து வரும் வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், புதிய வணிகங்களுக்கான தடைகளைக் குறைத்தல் மற்றும் அமீரகத்தின் புதுமையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான ஷார்ஜாவின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த முயற்சி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel