ADVERTISEMENT

துபாய்: நாளை முதல் பஸ், டாக்ஸிக்கான பிரத்யேக பாதை திறப்பு..!! வாகன ஓட்டிகள் பயன்படுத்தினால் 600 திர்ஹம்ஸ் அபராதம்..!!

Published: 20 Jan 2021, 4:04 PM |
Updated: 20 Jan 2021, 4:04 PM |
Posted By: admin

துபாயில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக பேருந்துகள் மற்றும் டாக்சிகள் செல்வதற்கென பிரத்யேகமான தனி பாதையொன்று வடிவமைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. நகரம் முழுவதும் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரத்யேக பாதைகள் துபாயின் பஸ் போக்குவரத்து பயண நேரங்களைக் குறைக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், துபாயில் காலித் பின் அல் வலீத் ஸ்ட்ரீட்டில் பிரத்யேக பஸ் மற்றும் டாக்ஸி பாதையானது நாளை (ஜனவரி 21 ) திறக்கப்படவுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பிரத்யேக பாதைகளின் மூலம் சுமார் ஐந்து நிமிடங்கள் ஒவ்வொரு பேருந்தின் பயணத்திலும் சேமிக்கப்படுகிறது என்றும், இது பேருந்துகளின் பயண நேரங்களை 24% மேம்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. RTA பொது போக்குவரத்து முகமை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது ஹாஷிம் பஹ்ரோஜியன் அவர்கள் தெரிவிக்கையில், “சாலை பயனர்களுக்கு தகவல் அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்த பிரத்யேக பாதை நுழைவாயிலில் அடையாளங்களை வைத்து, எந்த வகையான வாகனங்கள் இதனை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது” என்பது குறித்த விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் பேருந்து மற்றும் டாக்ஸிக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பாதையை பிற வாகன ஓட்டிகள் பயன்படுத்தினால் அவர்களுக்கு 600 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை பயனர்களுக்கு வழிகாட்டவும், பஸ்-டாக்ஸி ஸ்ட்ரிப்பின் தற்செயலான பயன்பாட்டைத் தவிர்க்கவும் இந்த பாதைக்கு ஒரு தனித்துவமான சிவப்பு நிற அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒளி சமிக்ஞைகளுடன் பாதையின் தொடக்கத்திலும் நடுப்பகுதியிலும் சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

காலித் பின் அல் வலீத் தெருவில் (Khalid bin Al Waleed Street) பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளுக்கான பிரத்யேக பாதைத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நிறைவு செய்த இந்த பாதையானது காலித் பின் அல் வலீத் ஸ்ட்ரீட்-அல் மினா ஸ்ட்ரீட் சந்திப்பிலிருந்து (Khalid bin Al Waleed Street-Al Mina Street Intersection) ஜபீல் ஸ்ட்ரீட் சந்திப்புக்கு (Zabeel Street Intersection) சற்று முன், இரு திசைகளிலும் என இந்த பாதை 4.3 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டத்தை நிறைவு செய்வதன் மூலம், அல் மன்கூல் (Al Mankhool), அல் கலீஜ் (Al Khaleej), காலித் பின் அல் வலீத் (Khalid bin Al Waleed), அல் குபைபா (Al Ghubaiba), நைஃப் (Naif), அல் இத்திஹாட் (Al Ittihad) மற்றும் அல் மினா (Al Mina) ஆகிய ஏழு முக்கிய வீதிகளில் பஸ் மற்றும் டாக்ஸிகளுக்கான பிரத்யேக பாதைகளின் மொத்த நீளம் 11.6 கி.மீ. வரை நீள்கிறது. தற்போது, ​​60 பேருந்து வழித்தடங்கள் பிரத்யேக பாதைகளைப் பயன்படுத்தும் என்றும், அவற்றில் 19 பேருந்து வழித்தடங்கள் காலித் பின் அல் வலீத் தெருவைப் பயன்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, RTA 7.3 கி.மீ நீளமுள்ள பிரத்யேக பேருந்து பாதைகளின் கட்டுமானத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதில் உள்ளடங்கும் பகுதிகள்:
  • நைஃப் ஸ்ட்ரீட் (1 கி.மீ)
  • அல் இத்திஹாத் ரோட் (500 மீ)
  • அல் மினா ஸ்ட்ரீட் (குவைத் ஸ்ட்ரீட்டில் இருந்து ஃபால்கான் சந்திப்பு (Falcon intersection) வரை 1.7 கி.மீ)
  • அல் மன்கூல் ஸ்ட்ரீட் (அல் சத்வா ரவுண்டபௌட்டில் (roundabout) இருந்து ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட் வரை 1.8 கி.மீ)
  • அல் கலீஜ் ஸ்ட்ரீட் (க்ரீக் ஸ்ட்ரீட்டில் இருந்து அல் முசல்லா ஸ்ட்ரீட் வரை 1.7 கி.மீ)
  • காலித் பின் அல் வலீத் ஸ்ட்ரீட் (அல் மினா ஸ்ட்ரீட் சந்திப்பிலிருந்து தெரு 16 வரை 100 மீ)
  • அல் குபைபா ஸ்ட்ரீட் (அல் மினா ஸ்ட்ரீட் சந்திப்பிலிருந்து ஸ்ட்ரீட் 12 வரை 500 மீ)