அபுதாபியில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் அவசர சிகிச்சை மையங்களில் பயன்படுத்த கொரோனா வைரஸைக் கண்டறிய மூன்று புதிய சோதனைகளுக்கு அபுதாபி சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய சோதனைகள் சமீபத்திய உலகளாவிய அறிவியல் முன்னேற்றங்களின் அடிப்படையில் வேகமானவை என்றும், இந்த முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சையைப் பற்றி மருத்துவர்கள் விரைவான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்டிருக்கும் புதிய சோதனைகள்:
- ஆன்டிஜென் சோதனை (Antigen test): 20 நிமிடங்களில் முடிவுகளை வழங்கும் ஸ்வாப் டெஸ்ட் மூலம் மேற்கொள்ளப்படும் விரைவான வைரஸ் கண்டறிதல் சோதனை
- RT-LAMP மரபணு சோதனை (RT-LAMP genetic test): ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்கும் ஸ்வாப் டெஸ்ட்
- உமிழ்நீர் மாதிரிகள் (Saliva specimens): ஸ்வாப் டெஸ்ட் எடுக்க முடியாத குழந்தைகளுக்கு கொரோனா வைரஸைக் கண்டறிய இந்த சோதனையைப் பயன்படுத்தலாம்.
.@DoHSocial has approved 3 new Covid-19 diagnostic tests to be used in ER departments & urgent care centres in #AbuDhabi emirate. The new tests which are based on the latest global scientific developments, provide faster results & support physicians to provide better patient care pic.twitter.com/Mmq6hT0lIa
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) January 24, 2021