ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் நீங்கள் வருடா வருடம் குளோபல் வில்லேஜுக்கு சென்று வருபவரா? உங்கள் முதல் பயணம் இன்னும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? குளோபல் வில்லேஜ் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்திருந்தால், உங்களுக்காகவே ஒரு சிறப்புப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குளோபல் வில்லேஜ் பூங்காவானது ‘The Global Village OG Fans’ எனும் தலைப்பில் ஒரு போட்டியை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது நீண்டகால பார்வையாளர்களை பூங்காவிலிருந்து தங்கள் பழைய புகைப்படங்கள் மற்றும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறது. அது உங்களின் குழந்தைப் பருவ வருகைகள், குடும்பப் பயணங்கள் அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட தருணங்களாகவோ இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பல அமீரகக் குடியிருப்பாளர்கள் குளோபல் வில்லேஜுடன் கொண்டிருக்கும் ஆழமான தொடர்பைக் கொண்டாடும் வகையில் இந்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வண்ணமயமான பெவிலியன்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் முதல் உலகளாவிய உணவு வகைகள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்கள் வரை, குளோபல் வில்லேஜ் நீண்ட காலமாக அதன் விருந்தினர்களுக்கு நீடித்த நினைவுகளை உருவாக்கும் இடமாக இருந்து வருகிறது.
அமீரகத்தில் வசிக்கும் தலைமுறையினருடன் சேர்ந்து குளோபல் வில்லேஜ் பூங்காவானது எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எப்படி பங்கேற்பது?
இந்த பிரத்யேகப் போட்டியானது, பிப்ரவரி 9 முதல் 13, 2026 வரை நடைபெறும் என்றும், இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்கும் அமீரகக் குடியிருப்பாளர்களை இது அனுமதிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் அசல் புகைப்படங்களாகவும், பங்கேற்பாளர்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்க, ரசிகர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை:
- குளோபல் வில்லேஜின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடரவும்
- போட்டி ரீலில் கமெண்ட் செய்யவும் மற்றும் இரண்டு நண்பர்களை டேக் செய்யவும்
- அவர்களின் பழமையான குளோபல் வில்லேஜ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் நேரடி செய்தி மூலம் அனுப்பவும்
வெற்றியாளர்கள் பிப்ரவரி 15, 2026 அன்று குளோபல் வில்லேஜின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றியாளர்களுக்கு என்ன கிடைக்கும்?
இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் ஒரு பிரத்யேக சீசன் 30 விஐபி பேக்கை பெறுவார்கள், இது அவர்களுக்கு பிரீமியம் அணுகலை வழங்குகிறது. இந்த தொகுப்பில் விஐபி பார்க்கிங், விஐபி நுழைவு மற்றும் வொண்டர் பாஸ் கார்டுகள் அடங்கும், அவை ஸ்டண்ட் ஷோ, நியான் கேலக்ஸி எக்ஸ் சேலஞ்ச் சோன், எக்ஸோ பிளானட் சிட்டி மற்றும் கார்னிவல் போன்ற பிரபலமான இடங்களில் பயன்படுத்தப்படலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel