ADVERTISEMENT

UAE: போக்குவரத்து அபராதங்களில் 50 சதவீத அதிரடி தள்ளுபடி..!! வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஷார்ஜா..!!

Published: 9 Feb 2021, 2:33 PM |
Updated: 9 Feb 2021, 2:49 PM |
Posted By: admin

ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (SRTA) கடந்த ஜனவரி 1, 2020 முதல் அக்டோபர் 31, 2020 வரை வழங்கப்பட்ட அனைத்து போக்குவரத்து அபராதங்களுக்கும் 50 சதவீத தள்ளுபடியை வழங்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தள்ளுபடி திட்டமானது வரும் மார்ச் 1 2021 வரை செல்லுபடியாகும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

போக்குவரத்து ஆணையம் அளித்திருக்கும் இந்த தள்ளுபடி திட்டத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்திக்கொண்டு தங்களின் அபராதங்களுக்கு தள்ளுபடியை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், போக்குவரத்து அபராதங்கள் அனைத்தும் SRTA வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து அபாரதங்களை www.srta.gov.ae என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலமாக செலுத்திக்கொள்ளலாம் என்றும் அதே போல், அல் அஸ்ராவில் உள்ள போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகம் மற்றும் கோர்பக்கன் மற்றும் கல்பாவில் உள்ள அலுவலகங்கள் மூலமாகவும் அபராதங்களை செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், குடியிருப்பாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் கூடுதல் தகவல்களுக்கு 600525252 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

 

View this post on Instagram

 

A post shared by RTA Sharjah (@rta_shj)