ADVERTISEMENT

UAE: காலாவதியான விசிட், டூரிஸ்ட் விசா வைத்திருப்பவர்களின் செல்லுபடி காலம் இலவச நீட்டிப்பு..!! மார்ச் இறுதி வரை தங்கலாம் என தகவல்..!!

Published: 28 Feb 2021, 3:13 PM |
Updated: 28 Feb 2021, 3:14 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் காலாவதியான சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர்கள் தற்பொழுது மார்ச் 31 வரை அமீரகத்தில் தொடர்ந்து தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாவதியான ஒரு மாத மற்றும் மூன்று மாத விசிட் மற்றும் சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாக பொது வதிவிட மற்றும் வெளியுறவு இயக்குநரகம் (GDRFA) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், பயண முகவர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் சார்பாக விண்ணப்பித்த துபாய் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் தானாகவே மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கடந்த டிசம்பர் 27 அன்று அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு மாத இலவச விசா நீட்டிப்பை அறிவித்திருந்தார். பல நாடுகள், குறிப்பாக ஐரோப்பாவில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததையொட்டி பல்வேறு நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை அறிவித்ததன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்திய தூதரகம் இது குறித்து கூறுகையில், சுற்றுலா விசாக்களில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த வெளிநாட்டினரின் காலாவதியான விசாக்கள் மற்றும் நுழைவு அனுமதியின் செல்லுபடி காலத்தை மார்ச் 31 வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் நீட்டிப்பதற்கான ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் முடிவை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளது.

தேரா டிராவல்ஸ் நிறுவனத்தின் முகவரான இனாஸ் இக்பால் என்பவர் கூறுகையில், இந்த விசா நீட்டிப்பானது துபாய் விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சாண்ட்செட் டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் மேத்யூ ஜான் கூறுகையில், “ஷார்ஜா மற்றும் அபுதாபியில் வழங்கும் விசாக்களுக்கு இந்த விசா நீட்டிப்பு இருப்பதாக தெரியவில்லை. விசா நீட்டிppai நம்பி இருந்த பலரும் இறுதியில் அபராதம் செலுத்தும் நிலைக்கு ஆளாக்குகின்றனர். எனவே பயணிகள் அமீரகத்தில் தொடர்ந்து தங்கி இருப்பதற்கு அல்லது தாயகத்திற்கு செல்ல திட்டமிடுவதற்கு முன் ஆன்லைன் அமைப்புகளில் தங்களின் விசா நிலை குறித்து சரிபார்த்துக்கொள்வதை நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.