ADVERTISEMENT

UAE: வீடுகளுக்கே சென்று இலவச Covid-19 PCR பரிசோதனை.. குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு முக்கியம்.. அஜ்மான் அரசு தகவல்..!!

Published: 4 Mar 2021, 4:34 PM |
Updated: 4 Mar 2021, 4:34 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மானில் இருக்கும் சமூக உறுப்பினர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று இலவச PCR சோதனை சேவைகளை வழங்குவதற்கான ஒரு முயற்சியை அஜ்மான் அரசு தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

‘உங்கள் உடல்நலத்திற்காக நாங்கள் உங்களை அடைகிறோம் (We reach you for your health)’ என்ற திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கையானது கொரோனா வைரஸுக்கு எதிராக அஜ்மான் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான சமீபத்திய முயற்சியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரம் சமூகத்தின் பல்வேறு குழுக்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் வயதானவர்கள், நாட்பட்ட நோய்கள் மற்றும் பிற பாதிப்புள்ள பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ ஊழியர்கள் அஜ்மானின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று PCR சோதனைகளை மேற்கொள்வார்கள் என்றும் இதன் மூலம், தனிப்பட்ட முறையில் சோதனை மையங்களுக்குச் சென்று மேற்கொள்ளப்படும் நேரம் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவசரநிலை, நெருக்கடி, பேரிடர் மேலாண்மைக்குழுவானது அனைவரின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதற்காக ஸ்கிரீனிங் குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்றும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT