ADVERTISEMENT

UAE: பப்ளிக் பார்க்கிங் இடங்களுக்கு ஒரு வருடம் வரை பெர்மிட்..!! புதிய சேவையை அறிமுகப்படுத்தும் அபுதாபி..!!

Published: 8 Mar 2021, 1:29 PM |
Updated: 8 Mar 2021, 3:41 PM |
Posted By: admin

அபுதாபி அரசானது வாகனங்களுக்கு குறிப்பிட்ட கால பார்க்கிங் பெர்மிட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பார்க்கிங் பெர்மிட் வசதியில் ஒன்று, மூன்று, ஆறு மற்றும் 12 மாதங்களுக்கு என தங்களின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் வாடிக்கையாளர்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அபுதாபி மற்றும் அல் அய்னில் கருப்பு மற்றும் நீல நிறங்களில் குறிக்கப்பட்ட நிலையான மேற்பரப்பு பொது பார்க்கிங் இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்த இந்த அனுமதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கான கட்டணமாக ஒரு மாதத்திற்கு 391 திர்ஹம்ஸ்மூ, ன்று மாதத்திற்கு 1,174 திர்ஹம்ஸ், ஆறு மாதத்திற்கு 2,348 திர்ஹம்ஸ் மற்றும் ஆண்டு முழுவதுமான பெர்மிட்டிற்கு 4,695 திர்ஹம்ஸ் என்றும்வ ரையறுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த பார்க்கிங் பெர்மிட்களை பெற விரும்பும் வாகன ஓட்டிகள் www.itc.gov.ae என்ற லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாகவோ அல்லது மின் சேவைகள் பிரிவின் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். இதற்காக அவர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடி மற்றும் வாகன பதிவு அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) கூறுகையில், இந்த புதிய பார்க்கிங் பெர்மிட்டானது வாகன ஓட்டிகளுக்கு மணி நேர அடிப்படையில் அல்லது ஒரு நாள் என்ற அடிப்படையில் பார்க்கிங் கட்டணங்களை செலுத்தத் தேவையில்லாமல் எளிதாக்குகிறது என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், “இந்த அனுமதி நிலையான பார்க்கிங்கில் (standard parking) பயன்படுத்த மட்டுமே தகுதியுடையது, மேலும் குடியிருப்பாளர்கள், வில்லா பகுதிகள் அல்லது வெள்ளை மற்றும் நீல நிறத்துடன் குறிக்கப்பட்ட பிரீமியம் பார்க்கிங் இடங்களில் பயன்படுத்த முடியாது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் ஒவ்வொரு வாகனத்திற்கும் பொது தட்டு எண்ணைத் தாங்காத வரை அனுமதி பெறலாம். கூடுதலாக, வெவ்வேறு நிறுவனங்கள், அஞ்சல் விநியோக நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்கள் வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களுக்கான அனுமதிகளையும் பெறலாம்.

புதிய சேவை ரெசிடெண்ட் பார்க்கிங் பெர்மிட்களை மாற்றாது

இந்த புதிய பார்க்கிங் பெர்மிட் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் குடியிருப்போர் பார்க்கிங் அனுமதிகளை மாற்றாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இருப்பினும், இது நிலையான பார்க்கிங்கிற்கான தினசரி பார்க்கிங் டிக்கெட்டை மாற்றுகிறது, இது ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹம் மற்றும் ஒரு நாள் முழுவதும் 15 திர்ஹம்ஸ் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பார்க்கிங் அனுமதியைப் பெற்றிருப்பவர்கள் பார்க்கிங் முன்பதிவு செய்யவோ, முன்பதிவு செய்யப்பட்ட பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்தவோ அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தவோ அனுமதிக்காது. இந்த பார்க்கிங் அனுமதி ஆன்லைனில் வழங்கப்படுவதால், அதை வாகனத்தின் டாஷ்போர்டில் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், வாடிக்கையாளர்கள் விரும்பும் போதெல்லாம் பெர்மிட் விவரங்களையும் திருத்தலாம் என்று ITC தெரிவித்துள்ளது.

அதே போல், ஒரு பார்க்கிங் பெர்மிட் வைத்திருக்கும் நபர் அபுதாபியை விட்டு வெளியே பயணிக்கிறார்களானால், அவர்கள் தங்களது வாகனத்தை பிரத்யேக வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்துவதற்கான கோரிக்கையையும் சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் அந்த வாகனங்கள் கைவிடப்பட்ட வாகனங்களாகக் கருதி, இழுத்துச் செல்லப்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.