உலகின் அதிகப் பரிசுத்தொகை கொண்ட விளையாட்டுப்போட்டி?
சவூதி அரேபியாவில் இந்த வாரம், உலகின் மிகப் பிரம்மாண்டமான 20 மில்லியன் டாலர் பரிசுத்தொகையுடன் கூடிய குதிரைப் பந்தயம் (Saudi Cup) நடக்க உள்ளது. உலகின் சமீபத்திய விளையாட்டு போட்டிகளில் இதுவே அதிகப் பரிசுத்தொகையைக் கொண்ட போட்டி ஆகும்.
சவூதி அரசானது சமீபத்திய ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகளில் அதிக முதலீடு செய்து வருகிறது . சுமார் 10,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் சவுதி கோப்பை (Saudi Cup), பிப்ரவரி 29 அன்று கிங் அப்துல்அஸிஸ் பந்தய களத்தில் நடைபெறுகின்றது.
பந்தயத்தில் முதலில் வரும் 10 நபர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படுகின்றது. முதலிடம் பிடித்தவருக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகையும் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு 3.5 மில்லியன் டாலர் பரிசுத்தொகையும் கொடுக்கப்படுகின்றது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeசவூதி கோப்பையில் சீரற்ற தளங்களில் மேலும் 7 பந்தயங்கள் நடக்க உள்ளன. இவை 9.2 மில்லியன் டாலர் பரிசுகளைப் பெறுகின்றன.
சவூதி கோப்பைக்கு முன் நடைபெற்ற துபாய் உலகக்கோப்பை (Dubai World Cup) மற்றும் பெகாசஸ் உலகக்கோப்பை (Pegasus World Cup) ஆகிய இரண்டும் உலகின் பிரம்மாண்டமான உலகக்கோப்பையாக கருதப்பட்டது.பெகாஸஸ் உலகக் கோப்பை 16 மில்லியன் டாலர் அளவிலும் துபாய் உலகக்கோப்பை 12 மில்லியன் டாலர் அளவிலும் நடந்துள்ளது. தற்பொழுது நடைபெற இருக்கும் சவூதி கோப்பை 20 மில்லியன் டாலர் அளவில் நடைபெற இருப்பதால் இதுவே தற்பொழுது முதலிடத்தைப் பிடித்துள்ளது.