ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், நாட்டின் வான்வெளியில் விமானப் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையம் மேலும் கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் தொடங்கிய பிறகு இந்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததுடன், மிக உயர்ந்த அளவிலான விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிகழ்நேரக் கண்காணிப்பு தொடரும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் எந்தவொரு சாத்தியமான நிகழ்வுகளையும் கையாள தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுக் குழுக்கள் முழுமையாகத் தயாராக உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சமீபத்திய காலகட்டத்தில் பயணிகள் மற்றும் விமான நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பாராட்டிய ஆணையம், எந்தவொரு சாத்தியமான நிகழ்வுகளையும் கையாள அதன் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுக் குழுக்கள் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து தகவல்களைப் பெறுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.