CBBC யின் நான்கு நாட்கள் நடக்கும் மாபெரும் கண்காட்சி : 80 % வரை தள்ளுபடி!!
துபாயில் உள்ள சிபிபிசி யில் நான்கு நாட்கள் நடக்க இருக்கும் மாபெரும் கண்காட்சி தொடங்கவுள்ளது. துபாய் வேர்ல்ட் ட்ரேடு சென்டரில் இருக்கும் ஷேக் ரஷீத் ஹாலில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் ஒரே இடத்தில் 300 க்கும் மேற்பட்ட பிராண்டுகளைக் கொண்டு வர இருக்கிறது.
இந்த கண்காட்சியானது மார்ச் 2 ல் தொடங்கி 5 ம் தேதி வரை நடைபெறும். இது நமக்கு பிடித்த பிராண்டுகளில் நம்ப முடியாத தள்ளுபடியை வழங்குகிறது. இந்த கண்காட்சியில் இடம்பெறும் அனைத்து பிராண்டுகளின் பொருட்களையும் 80 % வரை தள்ளுபடியில் பெறலாம்.
இந்த கடையானது கைக்கடிகாரங்கள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், கைப்பைகள், சன்கிளாஸ்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பல பொருட்களை உயர்தர பிராண்டுகளான மாஸிமோ தட்டி (Massimo Dutti), லா சென்சா (La Senza), சூட் பிளாங்கோ (Suite Blanco), பில்லாபோங் (Billabong), கெஸ் (Guess), வாலண்டினோ (Valentino), டெட் பேக்கர் (Ted Baker), மேஜே (Maje), வின்சி காமுடோ (Vinci Camuto), சாண்ட்ரோ (Sandro), அடிடாஸ் (Adidas), நைக் (Nike) மற்றும் இது போன்ற பல நிறுவங்களின் தயாரிப்புகளில் இருந்து வழங்குகிறது.
கண்காட்சியைக் காண நுழைவுக் கட்டணமின்றி இலவசமாக செல்லலாம். மேலும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவசப்பரிசு இருப்பது குறிப்பிடத்தக்கது.