அமீரகத்தை புரட்டி போட்ட கொரோனா….!!! முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தம்…!!!

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்நிலையில், உலகம் முழுவதும் பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல நிகழ்ச்சிகள், மாநாடுகள் போன்ற அனைத்து நிகழ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டோ அல்லது நிறுத்தி வைக்கப்பட்டோ வரும் இவ்வேளையில் அமீரகத்திலும் அதேபோல் பல்வேறு நிகழ்வுகள் தடை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில் ஷிஷாவிற்கு (shisha) தடை, அபுதாபியில் அனைத்து முக்கிய சுற்றுலாத்தலங்களும் மூடல், விளையாட்டு போட்டிகள் நிறுத்தி வைப்பு, புகழ்பெற்ற ஷேக் சையத் மசூதி தற்காலிக மூடல், குறிப்பிட்ட விமான சேவைகள் நிறுத்தம் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது துபாயில் நடக்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அபுதாபியில் சினிமாவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. துபாயில் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், பப்ளிக் பீச், மசாஜ் சென்டர், கலாச்சார இடங்கள், அருங்காட்சியகம், சினிமா என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறிப்பாக, துபாயில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலமான குளோபல் வில்லேஜ், அதன் சீசன் முடியும் முன்னரே நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
In line with ongoing efforts to safeguard public health, @Dubai_DED directs all cinemas, theme parks, amusement games & electronic game centres, bodybuilding & fitness gyms & spring camps licensed in #Dubai to halt all their activities & services until end of March 2020. pic.twitter.com/nAcZ0feS08
— Dubai Media Office (@DXBMediaOffice) March 15, 2020
In line with ongoing efforts to safeguard public health, Global Village has announced the early closure of its 2019-2020 season with immediate effect. The @GlobalVillageAE looks forward to welcoming visitors for its next season. #Dubai pic.twitter.com/lnaHMKaNG3
— Dubai Media Office (@DXBMediaOffice) March 15, 2020
மேலும், ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் நடக்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த மாதம் இறுதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அபுதாபியில் அல் அய்னில் இருக்கும் மிருகக்காட்சி சாலையும் தற்பொழுது பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்திலேயே ஒரு வைரஸின் பாதிப்பையொட்டி அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்தி வைப்பது அமீரக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்பது மிகையல்ல.