இசைஞானியின் இசை ராஜாங்கம்…எங்கு?? எப்போது??
இசை என்று சொன்னாலே நம் எல்லோரின் மனதிலும் வருவது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தான். இவரின் பாடல்கள் மூலம் தமிழ் திரைத்துறை மிக முக்கிய மைல்கல்லை எட்டியது. பல வருடங்களாக இசைத்துறையில் தனக்கே உரித்தான பாணியில் இசையமைத்து வரும் இளையராஜாவின் பாடல்கள், அனைத்து வயதினரையும் கவரும் வகையில் அமைந்திருக்கும்.
குறிப்பாக, இளையராஜாவின் மெலோடிப் பாடல்களுக்கு மயங்காத ஆளே இல்லை எனலாம். இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 20,000க்கும் மேற்பட்ட இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தற்பொழுது இந்த மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஷார்ஜாவில் இசைக்கச்சேரி நிகழ்த்த உள்ளார்.
இந்த மாதம் 27 ம் தேதி நடக்க இருக்கும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் நிகழ்ச்சியானது ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் வளாகத்தில் நடக்க உள்ளது. இளையராஜா 15 வருடங்களுக்கு பிறகு அமீரகத்தில் இசைக்கச்சேரி நிகழ்த்த உள்ளது நினைவுகூறத்தக்கது.
நிகழ்ச்சி பற்றிய விபரங்கள்
இடம் : ஷார்ஜா கிரிக்கெட் வளாகம்
நாள் : மார்ச் 27 , 2020
நேரம் : மாலை 6 மணி முதல் 10 மணி வரை
டிக்கெட் விலை : 50 திர்ஹம் முதல் தொடங்கும்.