அமீரக செய்திகள்

SALIK கணக்கு தொடங்க இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்… RTA அறிவிப்பு!!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சாலிக் டேக்(Salik Tag) வாங்கும் போது கொடுக்கப்படும் சாலிக் படிவங்களை (Salik Forms) நிறுத்தியுள்ளது. மாற்றாக, சாலிக் போர்ட்கள் (www.salik.gov.ae) அல்லது ஸ்மார்ட் சாலிக் அப்ளிகேஷன் (Smart Salik) மூலம் சாலிக் டேக்கை பதிவு செய்து செயல்படுத்த வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

துபாயின் மகுட இளவரசரும் துபாய் செயற்குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தொடங்கிய காகிதமில்லா பணிச்சூழலை வளர்த்து புதிய தொழிநுட்பங்களை அதற்கு பதிலாக பயன்படுத்தும் திட்டத்தை ஆதரித்து இணைய சேவைகளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான துபாய் அரசாங்கத்தின் திட்டத்தில் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அல்லது சாலிக் வலைத்தளம் / அப்ளிகேஷன் மூலம் சாலிக் டேக்(Salik Tag) வாங்கியவுடன், சாலிக் டேக், போக்குவரத்து கோப்பு எண் (Traffic File Number), மொபைல் போன் போன்ற எளிய விவரங்களை உள்ளிட வேண்டும். பின்னர் வெற்றிகரமாக ரெஜிஸ்டரேஷன் முடிந்தது குறித்து வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும்.

சாலிக் டேக்கின் டிஜிட்டல் பதிவு ஆர்டிஏவின் இணைய சேவைகளின் ஒரு பகுதியாகும். சாலிக் டேக் ஆன்லைனில் வாங்குவது, சாலிக் கணக்கை ரீசார்ஜ் செய்வது, வலைத்தளம் / ஸ்மார்ட் அப்ளிகேஷன் வழியாக சாலிக் கணக்கில் புதிய வாகனத்தை சேர்ப்பது, சாலிக் விவரங்களை புதுப்பித்தல், மின்னஞ்சல் வழியாக சாலிக் கட்டணத்திலிருந்து விலக்கு பெற விண்ணப்பித்தல் , சாலிக் மீறல்களுக்கு ஆட்சேபனை தெரிவித்தல், மாதாந்திர சாலிக் அறிக்கையை கோருதல் மற்றும் சாலிக் கணக்கிலிருந்து ஒரு வாகனத்தை அகற்றுதல் போன்ற சேவைகள் இதில் அடங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!