UAE : ரெசிடென்ஸ் விசா காலாவதியானால் தானாகவே புதுப்பித்துக்கொள்ளும் வசதி அறிமுகம்..!!! மெடிக்கல் டெஸ்ட் தேவை இல்லை..!!!
கொரோனா வைரஸ் பரவலையொட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratisation) மற்றும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (Federal Authority for Identity and Citizenship), அமீரகத்தில் வேலை செய்யும் ரெசிடென்ஸ் விசா முடிந்த ஊழியர்களுக்கு தங்களுடைய விசாவை புதுப்பிக்கும் போது மேற்கொள்ளப்படும் மருத்துவ சோதனைகளிலிருந்து (medical test) விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
Under the protective measures adopted to limit coronavirus spread, work permits and residencies will be automatically renewed for establishments’ employees and domestic workers- with the exemption of the medical tests. #MOHRE #UAE pic.twitter.com/xdM0o8yiCr
— MOHRE_UAE وزارة الموارد البشرية والتوطين (@MOHRE_UAE) March 25, 2020
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் போன்றோருக்கு பணி அனுமதி (Work Permit) மற்றும் ரெசிடென்ஸ் விசாக்கள் தானாகவே புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையின் கீழ், அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் விசாவை புதுப்பிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள மருத்துவ பரிசோதனை மையங்களுக்கு செல்ல தேவையில்லை. அதற்கு பதிலாக, அத்தகைய சேவைகளுக்கான கட்டணம் அங்கீகரிக்கப்பட்ட கட்டண சேனல்கள் மூலம் சேகரிக்கப்படும். கட்டணம் செலுத்தப்பட்டவுடன், ஊழியர்களின் விசாக்கள் தானாகவே புதுப்பிக்கப்படும். இதனால், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து சட்டபூர்வமாக தங்கி வேலை செய்யலாம். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும், கொரோனாவிற்கு எதிராக தங்களது சொந்த பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.