அமீரக செய்திகள்

UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 4, 2020) : பாதிக்கப்பட்டோர் 241 பேர்..!!! மொத்த எண்ணிக்கை 1,505 பேர்..!!! ஒருவர் பலி..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 4,2020) புதிதாக 241 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,505 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக 53 வயதான அரபு நாட்டை சேர்ந்த ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 17 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் 841 பேர் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!