அமீரக செய்திகள்

UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 10, 2020) : பாதிக்கப்பட்டோர் 370 பேர்..!!! மொத்த எண்ணிக்கை 3,360 பேர்..!!! இருவர் பலி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10, 2020) புதிதாக 370 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,360 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புதிதாக ஆசிய நாட்டை சார்ந்த இருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 150 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!