ADVERTISEMENT

ஷார்ஜாவில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் மீண்டும் அமல்..!! ஷார்ஜா முனிசிபாலிடி அறிவிப்பு..!!

Published: 23 Jun 2020, 4:20 PM |
Updated: 23 Jun 2020, 4:41 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் கொரோனாவின் பாதிப்பினால் அமல்படுத்தப்பட்ட இயக்கக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 1 ம் தேதி முதல் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் இலவசமாக தங்களின் வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்று ஷார்ஜா அரசாங்கம் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த இலவச பார்க்கிங் திட்டமானது ஜூன் மாதம் 30 ம் தேதி வரை மட்டுமே நீடிக்கும் என்றும் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஷார்ஜா முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஷார்ஜா முனிசிபாலிடி துறையில் இருக்கும் வாடிக்கையாளர் சேவை பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் காலித்பின் ஃபலாஹ் அல்சுவைதி கூறுகையில், கொரோனாவினால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் குடிமக்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் ஆதரவளிக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாக ஷார்ஜாவில் குடியிருப்பாளர்களுக்கு 42,000 வாகன பார்க்கிங் செய்யும் இடங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், தற்பொழுது ஷார்ஜாவில் கொரொனாவினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த நடவடிக்கைகள் போன்ற பலவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக வரும் ஜூலை மாதம் முதல் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT