விளையாட்டு

IPL-2020 போட்டிகளுக்காக அமீரகம் வரும் தோனி தலைமையிலான CSK அணி..!!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் வெகு விமரிசையாக நடத்தப்படும் IPL (Indian Premier League) போட்டிகளானது இந்த வருடம் கொரோனாவின் தாக்கத்தினால் திட்டமிட்டபடி போட்டிகளை நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் தற்பொழுது வரையிலும், கொரோனாவின் பாதிப்புகள் இந்தியாவில் தொடர்ந்து வருவதால் IPL போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு அதன்படி வரும் செப்டம்பர் மாதம் போட்டிகள் துவங்கும் என IPL நிர்வாகம் சார்பாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, அமீரகத்தில் தொடங்க இருக்கும் IPL போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. அதில் முதலாவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் கிங்ஸ் II பஞ்சாப் அணிகள் (Kings II Punjab) இன்று அமீரகத்திற்கு வந்துள்ளன.

தமிழ்நாட்டை மையமாகாக கொண்டு விளையாடும் MS தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியானது நாளை (ஆகஸ்ட் 21) ம் தேதி அமீரகத்திற்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், CSK அணியுடன் சேர்த்து, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியும் நாளை அமீரகத்திற்கு வரவிருப்பதாக கூறப்பட்டுள்ளது

இதே போன்று வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 22 ம் தேதியன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் 23 ம் தேதியன்று டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் (Sunrisers Hyderabad) அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததற்கு பின்னர் விளையாடப்போகும் முதலாவது போட்டி என்பதால், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் IPL போட்டிகளுக்கு தோனி ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும், IPL போட்டிகளுக்காக அமீரகம் வரும் அனைத்து அணியின் வீரர்களும் அதில் பணிபுரியும் ஊழியர்களும் ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் அனைவருக்கும் ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!