வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் நடவடிக்கையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் இருந்து 299 இலங்கையர்கள் இன்று (ஆகஸ்ட் 13) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகளில் இருந்தும் தாயகம் திரும்பிய இலங்கையர்கள் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் மத்தல விமான நிலையம் சென்றடைந்ததற்காகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் 289 இலங்கையர்கள் அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு இன்று காலை சென்றடைந்ததாகவும் அதில் ஆறு சிறுவர்களும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சென்றடைந்த அனைவருக்கும் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொண்ட பின்னர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.