ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று காலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக NCM தகவல்..!!

Published: 4 Sep 2020, 6:07 AM |
Updated: 4 Sep 2020, 6:07 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புஜைராவில் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) காலையில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமீரகத்தின் தேசிய அளவீட்டு மையம் (NCM) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

புஜைராவின் கடல் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் சரியாக காலை 6:08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அப்பகுதிக்கு அருகாமையில் இருக்கக்கூடிய உள்ளூர்வாசிகளால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் NCM தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தேசிய அளவீட்டு மையம் (NCM) தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT