ADVERTISEMENT

துபாய் மாலுக்கு திடீர் வருகை தந்த ஷேக் முகமது: அதிகாரிகளுடன் வளாகத்தைச் சுற்றி வலம்வரும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரல்!!

Published: 20 Sep 2026, 5:29 PM |
Updated: 20 Sep 2026, 5:29 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், பிரபலமான ஷாப்பிங் இடமான துபாய் மாலில் சனிக்கிழமையன்று அதிகாரிகளுடன் வருகை தந்தார். வணிக வளாகத்திற்குள் அவர் நடந்து செல்லும் ​​காட்சியைக் கண்டு அங்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.

ADVERTISEMENT

அங்கு வந்திருந்த மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருக்க, ஷேக் முகமது பல அதிகாரிகளுடன் மால் வளாகத்தில் நடந்து சென்று, அங்கிருந்த செயல்பாடுகளைக் கவனித்தவாறும் சூழலை உற்றுநோக்கியவாறும் செல்வதைக் காணமுடிந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதிகாரிகளுடன் இணைந்து மாலின் பல்வேறு பகுதிகளில் அவர் வலம் வரும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

ADVERTISEMENT

துபாய் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், பல்வேறு திட்டங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு ஷேக் முகமது தொடர்ந்து மேற்கொண்டு வரும் பொது வருகைகளின் வரிசையில் இந்தச் சமீபத்திய வருகையும் அமைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்திலும் அவர் துபாய் மாலுக்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி வருகை தந்திருந்தார். அப்போது மூத்த அதிகாரிகளுடன் வளாகத்தைச் சுற்றிப் பார்த்த அவர், புதிதாகத் திறக்கப்பட்ட ‘பிரைமார்க்’ (Primark) கடையையும் பார்வையிட்டார்.

ADVERTISEMENT

இத்தகைய வருகைகள் ஷேக் முகமதுவின் பொது நிகழ்ச்சிகளில் ஒரு வழக்கமான அம்சமாக மாறியுள்ளன. புதிய வளர்ச்சிப் பணிகள், பொது வசதிகள் மற்றும் வணிக மையங்களை நேரில் பார்வையிடவும், அங்குள்ள சேவைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை உற்றுநோக்கவும் இது அவருக்கு வாய்ப்பளிக்கிறது.

துபாய் மாலுக்கு அவர் மேற்கொண்ட இந்தச் சமீபத்திய வருகையும், அந்த நேரத்தில் அங்கு இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel