அமீரக செய்திகள்
துபாய் அல்கூஸ் தொழில்துறை பகுதியில் தீ விபத்து..!!
துபாயில் இருக்கக்கூடிய அல்கூஸ் தொழில்துறை பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1:17 மணிக்கு அல்கூஸ் (Al Quoz) தொழில்துறை பகுதி-3 இல் அமைந்துள்ள ஒரு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் வந்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி தீ விபத்துகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இதே போன்று நேற்றைய தினம் அஜ்மானில் இருக்கக்கூடிய நான்கு ஃபர்னிச்சர் கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.