அமீரக செய்திகள்

UAE: 30 சதவீத நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய திட்டம்.. 10 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க யோசனை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கும் வணிக நிறுவனங்களில் கிட்டத்தட்ட 20 சதவீத வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை முடக்கியுள்ளதாகவும், அதே நேரத்தில் 30 சதவீத வணிக நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கன்சல்டண்சி மெர்சர் நடத்திய ஆண்டு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 சதவீத நிறுவனங்கள் கொரோனாவினால் விதிக்கப்பட்ட வேலைநிறுத்தத்திற்குப் பிறகு இந்த ஆண்டில் பெரும்பாலும் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் சம்பள உயர்வுகளை வழங்க தாமதப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொற்றுநோயை சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் வணிக நடவடிக்கைகள் குறித்த கணக்கெடுப்பில் இந்த முடிவு தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் செயல்முறையை மேற்கொண்டு விட்டன என்றும், அதே நேரத்தில் ஊழியர்களின் சம்பளமும் 30-50 சதவீதம் குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இன்னும் அறிவிப்பு வரும் வரை சம்பளம் வழங்காமல் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சரில் உள்ள மெனா நிறுவனத்தின் தொழில் தயாரிப்புத் தலைவர் டெட் ரஃபூல் கருத்துப்படி, “10 சதவீத நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்தன. ஆனால் இவை அனைத்தும் தற்காலிக அடிப்படையில் இருந்தன. 2021 ஆம் ஆண்டிலும் நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தாலும், புதிய வேலை ஏற்பாடுகள் நிரந்தர கொள்கைகளை நோக்கி தொடர்ந்து உருவாக வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெரும்பான்மையுடன் ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் மேம்பட்ட வணிக உத்திகளை நோக்கி முன்னேறி வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிடும் 30 சதவீத நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் சராசரியாக 10 சதவீதம் குறைப்பை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சில்லறை விற்பனையில் மிகப்பெரிய தாக்கம் உணரப்படும் என்றும், சில்லறை விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பது போல் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விற்பனை நடைபெறாவிட்டால், தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என எதிர்பாக்கப்படுவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் 500 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் மூலம் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!