அமீரக செய்திகள்

உலகளவில் அதிவேக மொபைல் நெட்வொர்க் சேவை வழங்குவதில் முதலிடம் பிடித்த எடிசலாட்..!!

2020 ஆம் ஆண்டில் உலகளவில் அதிவேக மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டராக அமீரகத்தின் எடிசலாட்டை (etisalat), பிராட்பேண்ட் மற்றும் மொபைல் நெட்வொர்க் அப்ளிகேசனான ஓக்லா (Ookla) அங்கீகரித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக தொலைதொடர்பு ஆபரேட்டரான எடிசலாட் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இணையதளம் மற்றும் மொபைல் தளங்களில் பல்வேறு அப்ளிகேஷன்களை பயன்படுத்தி இணைய வேகத்தை சரிபார்க்க ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் உள்ள வாடிக்கையாளர்களால் தீவிரமாக தொடங்கப்பட்ட மில்லியன் கணக்கான சோதனைகளின் அடிப்படையில் ஓக்லாவின் இந்த தரவரிசை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கான அதிவேக (speedest) விருதுகள் ஒவ்வொரு நெட்வொர்க் ஆபரேட்டர்களின் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் (download and upload) செய்யும் அளவை உள்ளடக்கிய ‘ஸ்பீட் ஸ்கோரை (Speed Score)’ பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எடிசலாட் நெட்வொர்க்கின் பதிவிறக்க வேகம் 115.89 mbps மற்றும் ஒட்டுமொத்த தரவரிசை ‘ஸ்பீட் ஸ்கோரில்’ 98.78 mbps எனவும் ஓக்லா ஸ்பீடெஸ்ட் தரவுகளின்படி கூறப்பட்டுள்ளது. உலகளவில் ஸ்பீட் ஸ்கோரில் 90 ஐ விடவும் உயர்ந்த இடத்தைப் பெற்ற ஒரே ஆபரேட்டர் எடிசலாட் தான் என அந்த ஆய்வு முடிவில் ஓக்லா அறிவித்துள்ளது. இதே போன்று 2019 ஆம் ஆண்டின் மூன்று மற்றும் நான்காம் காலாண்டில் வேகமான மற்றும் நிலையான பிராட்பேண்ட் நெட்வொர்க் என்ற விருதையும் வென்றுள்ளது.

“இன்று, உலகின் மிக விரைவான மொபைல் நெட்வொர்க்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் எடிசலாட்டை அங்கீகரிப்பதில் பெருமைப்படுகிறேன். இது உண்மையிலேயே ஒரு முக்கியமான பாராட்டு, மற்றும் எடிசலாட் இதற்கு முற்றிலும் தகுதியானது. நெட்வொர்க் வேகத்தைப் பொறுத்தவரை எடிசலாட் உலகின் முதலிடத்தில் உள்ளது மற்றும் அதிகாரப்பூர்வமாக உலகின் அதிவேக மொபைல் நெட்வொர்க். மேலும் வேகமான மொபைல் ஆபரேட்டராக வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், GCC மற்றும் அரபு பிராந்தியத்தில் மிக விரைவான நிலையான பிராட்பேண்ட் நெட்வொர்க்குடனும் எடிசலாட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று ஓக்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான டக் சட்டில்ஸ் (Doug Suttles) கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!