அமீரக செய்திகள்

துபாய்: அக்டோபர் 26 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ-ஸ்கூட்டர் சேவையை துவங்கவிருக்கும் RTA ..!! வீடியோ விளக்க காணொளி..!!

துபாயில் புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இ-ஸ்கூட்டர் சேவை வரும் அக்டோபர் 26, திங்கள்கிழமை முதல் பயணிகளின் பயன்பாட்டிற்கு துவங்கவிருப்பதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சேவை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றியும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

ஒரு வருட கால சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் துவங்கவிருக்கும் இந்த இ-ஸ்கூட்டர் சேவை, அதன் தேவையை பொறுத்து தொடர்ந்து இதன் சேவை நிலைநிறுத்தப்படுமா என்பது மதிப்பீடு செய்யப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். வரும் திங்கள் முதல் தொடங்கவிருக்கும் இந்த இ-ஸ்கூட்டர்கள் சேவை துபாயில் முகமது பின் ரஷீத் பவுல்வர்டு (Mohammed Bin Rashid Boulevard), துபாய் இன்டர்நெட் சிட்டி (Dubai Internet City), செகண்ட் டிசம்பர் ஸ்ட்ரீட் (2nd of December St), அல் ரிகா (Al Rigga) மற்றும் ஜுமைரா லேக் டவர்ஸ் (and Jumeirah Lake Towers) என மொத்தம் ஐந்து மண்டலங்களில் சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-ஸ்கூட்டர்களை பயன்படுத்த விரும்பும் பயனாளிகள் ஸ்மார்ட் ஆப் எனும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து அதில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், மேலும் ஸ்கூட்டர்களை சிறப்பு சைக்கிள் ஓட்டுதல் தடங்களில் மட்டுமே இயக்க முடியும் எனவும் போக்குவரத்து மற்றும் சாலைகள் அமைப்பின் (RTA) நிர்வாக இயக்குநர் ஹுசைன் முகமது அல் பன்னா கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில் சிறப்பு பாதையை விட்டு ஸ்கூட்டரை வேறொரு பாதையில் இயக்கும்போது அதனை கண்டறிய புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தொழிநுட்பதின் மூலம் இ-ஸ்கூட்டரின் எலக்ட்ரிக் மோட்டார் தானாகவே நின்றுவிடும் என்றும் அல் பன்னா விளக்கமளித்துள்ளார். ஸ்மார்ட் ஆப்பிள் மீட்டரை நிறுத்த ஓட்டுனர்கள் ஸ்கூட்டரை சரியான இடத்தில் நிறுத்த வேண்டும் என்றும் நிறுத்தப்பட்டதும் பயனாளிகள் அதற்கான சேவை கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது துவங்கப்படவிருக்கும் இந்த சோதனை ஓட்டத்தில் Careem, Lime, Tier, Arnab மற்றும் Skurrt ஆகிய நிறுவனங்கள் இ-ஸ்கூட்டர் சேவையை வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!